பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

"தோழியே, தலைவர் தொலைவில் உள்ள நாட்டிலிருந்து பொன் அணி முதலிய அணி கலன்களை ஈட்டி வருதற் பொருட்டுச் சிறந்த மூங்கிலைப் போன்று பருத்திருந்த என் தோள்கள் மெலியுமாறு என்னை விட்டுப் பிரிந்து போனார்

தலைவர் சென்ற காட்டு நிலம் பிளக்குமாறு தீயைப் போன்ற ஞாயிற்றின் கதிர் பசுமை நீங்கிடக் காய்தலால், நிழல் சுருங்க வற்றிப் போன மரங்களையுடையது பாறைகள் கொதித்து நீர் இல்லாத பசிய சுனைகளிலும் ஈரம் இல்லாத வண்ணம் காய்தலால் உலர்ந்து அங்குச் சொரியும் மூங்கில் நெற்கள் பொரிதற்குக் காரணமான வெப்பத்தை உடையன தன்பால் செல்பவர் எவரும் இல்லாததால் வழிப்பறி செய்ப வரும் தம தொழிலைத் துறந்து சோம்பியிருத்தலால் சுரம் பொலிவில்லாத நெறியையுடையது அசையும் கிளைகளை யுடைய நார் இல்லாத முருங்கையின் குலைந்த வெண்மை யான மலர்கள் கடுமையான சூறாவளியான காற்று வாரி வீச, உடைந்த அலையின் துளிகளைப் போலப் பரந்து கிடத்தலால் கடலின் கரையின் தோற்றம் போல் தோன்று கின்றது இத் தகைய காட்டினைக் கடந்து சென்றார் நம் தலைவர் அங்ங்னம் காட்டைக் கடந்து போன அவர், வண்டுகள் மொய்க்குமாறு மலர்ந்த பூக்களால் ஆன கண்ணி மாலையையும் ஒண்மையான கழலையும் உடைய அஞ்சத் தக்க குதிரைகளையுடைய மழவரை வென்று புறம் காட்டி ஒடச் செய்த சிறந்த போர் ஆற்றலை உடைய வேளிர் குலத் தலைவனான ஆவி' என்னும் மன்னனுக்குரிய, அறுத்துத் திருத்திய கொம்பினையுடைய யானை நிற்கும், முருகப் பெருமான் வீற்றிருக்கின்ற பொதினி மலையின் சாரலான அவ் இடத்தில், சிறியவனான சாணைக்கல் செய்பவன் அரத் தோடு சேர்த்துச் செய்த கல்லைப் போன்று யான் உன்னைப் பிரிய மாட்டேன் என்று தலைவர் முன்று கூறிய சொல்லை மறந்து விட்டாரோ” என்று பிரிவிடை ஆற்றாளாய தலை மகள் தோழிக்குச் சொன்னாள்

298. எவ்வாறு போக்குவது துன்பத்தை? இருங் கழி முதலை மேஎந்தோல் அன்ன

கருங் கால் ஒமைக் காண்பு இன் பெருஞ் சினைக்