பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை த. கோவேந்தன் ; 191

கடியுடை நனந்தலை, ஈன்று இளைப்பட்ட, கொடு வாய்ப் பேடைக்கு அல்குஇரை தரீஇய மான்று வேட்டு எழுந்த செஞ் செவி எருவை - வான் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன். துளங்கு நடை மரையா வலம் படத் தொலைச்சி, ஒண் செங் குருதி உவற்றி உண்டு அருந்துபு, புலவுப் புலி துறந்த கலவுக் கழி கடு முட்ை, கொள்ளை மாந்தரின் - ஆனாது கவரும் புல் இலை மராஅத்த அகன் சேண் அத்தம், கலம் தரல் உள்ளமொடு கழியக் காட்டிப், பின் நின்று துரக்கும் நெஞ்சம் நின் வாய் வாய்போல் பொய்ம்மொழி எவ்வம் என் களைமா - கவிர் இதழ் அன்ன காண்பு இன் செவ் வாய், அம் தீம் கிளவி, ஆய் இழை, மடந்தை கொடுங் குழைக்கு அமர்ந்த நோக்கம் நெடுஞ் சேண் ஆர் இடை விலங்கும் ஞான்றே?

- எயினந்தை மகனார் இளங்கீரனார் அக 3 “பெரிய உப்பங்கழியில் உள்ள முதலையின் முதுகில் பொருந்திய தோலைப் போன்ற கரிய அடிப் பக்கத்தை உடையது. ஓமை மரம். அம் மரத்தின் காண்பதற்கு இனிய பெரிய கிளையில் காவலை உடைய இடத்தில் குஞ்சுகளை ஈன்று காவற்பட்ட வளைந்த வாயையுடைய பேடை உள்ளது அப் பேடைக்கு மிக்க இரையைக் கொணர்ந்து தரும் பொருட்டு, மயங்கி இரையை விரும்பி எழுந்த சிவந்த செவி யையுடைய ஆண் கழுகு சென்றது அது வானை அள்ாவிய உச்சி பொருந்திய சிறந்த மலைச் சாரலில், அசைந்த நடையையுடைய பெண்மானை வலப்பக்கமாய் விழும்படி கொன்று வீழ்த்தி அதன் ஒளியுடைய சிவந்த குருதியைக் குடித்துப் புலால் நாற்றம் வாய்ந்த புலி விட்டுச் சென்ற மூட்டுவாய் கழிந்த மிக்க நாற்றம் உடைய புலாலைக் கொள்ளை புரியும் கள்வர் போன்று விடாது நரிக்ள் கவர்ந்து செல்லும் இத்தகைய இடமான பொலிவில்லாத இன்ஸ்க்ளை யுடைய மா மரங்கள் பொருந்திய அகன்ற் நீண்ட வழியில், தலைவிக்கு அணிகலன்களை ஈட்டி விரும் எண்ணத்தால்