பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

கடந்து செல்வதாகக் காட்டி எம்மைப் பின்னிருந்து தூண்டும் நெஞ்சமே, முருக்க மலரைப் போன்ற காண்பதற்கு இனிய சிவந்த வாயையும், அழகிய இனிய மொழியையும், ஆராய்ந் தெடுத்த அணிகளையும் அணிந்த நம் தலைவியின், குழை யுடன் மாறுபட்ட பார்வையானது மிக நீண்ட காட்டில் தோன்றித் தடுக்கும் போது நின் வாயின் மெய் போன்ற பொய்ம் மொழி எம் வருத்தத்தை எப்படிப் போக்குவ தாகும் கூறுவாயாக' ;

299. பிரியின் இவள் உயிர் வாழாள் அளி நிலை பெறாஅது அமரிய முகத்தள், விளி நிலை கொள்ளாள், தமியள், மெல்மெல, நலம் மிகு சேவடி நிலம் வ்டுக் கொள்ாஅ, குறுக வந்து, தன் கூர் எயிறு தோன்ற வறிது அகத்து எழுந்த வாய் அல் முறுவலள், கண்ணியது உணரா அளவை, ஒண்ணுதல், வினை தலைப்படுதல் செல்லா நினைவுடன் - முளிந்த ஒமை முதையல் அம் காட்டு, பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி, மோட்டு இரும் பாறை, ஈட்டு வட்டு ஏய்ப்ப, உதிர்வன படுஉம் கதிர் தெறு கவாஅன், மாய்த்த போல மழுகு நுனை தோற்றி, பாத்தியன்ன குடுமிக் கூர்ங் கல், விரல் நுதி சிதைக்கும் நிரை நிலை அதர, பரல் முரம்பு ஆகிய பயம் இல், கானம் இறப்ப எண்ணுதிர்ஆயின்- 'அறத்தாறு அன்று" என மொழிந்த தொன்றுபடு கிளவி அன்ன ஆக என்னுநள் போல, முன்னம் காட்டி, முகத்தின் # 60)[[ILIII, ஒவச் செய்தியின் ஒன்று நினைந்து ஒற்றி, பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொடு, ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன் தலைத் து நீர் பயந்த துணை அமை பிணையல் மோயினள் உயிர்த்த காலை, மா மலர்