பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை த. கோவேந்தன் ; 193

மணி உரு இழந்த அணி அழி தோற்றம் கண்டே கடிந்தனம், செலவே - ஒண்டொடி உழையம் ஆகவும் இனைவோள் பிழையலள் மாதோ, பிரிதும் நாம் எனினே!

- பாலை பாடிய பெருங்கடுங்கோ அக 5 "நெஞ்சே, ஒளி பொருந்திய நெற்றியுடைய நம் தலைவி, யான் மிகுதியாகப் பாராட்டியதால் யான் பொருள் வயின் பிரிவேன் என்று உணர்ந்து கொண்டாள் அதைப் பொறாமல் மாறுபட்ட முகத்துடன், நாம் அழைத்தலைக் கேளாமலே நாண் முதலியவற்றைத் துறந்தவளாய், மென்மெலச் செல்லும் இயல்புடையவளாய்ச் சிவந்த அடியால் நிலத்தில் சுவடு தோன்ற அண்மையில் வந்தாள் முன்பெல்லாம் பல் தோன்றாது முறுவலித்து நகும் தன் இயல்புக்கு மாறாகத் தன் கூர்மையான பற்கள் வெளிப்படுமாறு தன்னிடத்து எழுந்த மெய்ம்மை அல்லாத முறுவல் கொண்டவளாய், யான் எண்ணியதை உணரும் முன்னம் பொருள் வயின் பிரிதலை உடன்படாத எண்ணத்துடன் என்னை நோக்கி னாள். நோக்கி, காய்ந்த ஒமை மரங்களையுடைய காட்டில் நெல்லி மரத்தின் பளிங்கு போன்ற பல காய்கள் உயர்ந்த பெரிய பாறையில் சிறுவர் விளையாடு வதற்காகச் சேர்த்து வைத்த வட்டுக் காய்களைப் போல் உதிர்ந்து கிடக்கும் ஞாயிற்றின் கதிர்கள் காயும் பக்க மலைகள் அவற்றின் பதித்து வைத்தாற் போன்ற கூர்மையான் பரற் கற்கள் தீட்டப் பட்டவை போல் தேய்ந்த கூர்முனையைத் தோற்றுவித்து வழியில் செல்பவரின் கால் விரல் நுனியைச் சிதைக்கும்படி கல் ஒழுங்குடையவை அவ் வழிகள் பொருந்திய பரற் கற் களையுடைய மேட்டு நிலமான வளம் இல்லாத காட்டைக் கடந்து செல்ல நீவிர் எண்ணுவீராயின்

‘காதல் உடையவரை விட்டுப் பிரிதல் அற நெறியன்று” எனக் கூறிய உம் வாயிற் பிறந்த பழைமையான சொல் அங்ங்னம் கூறிய அளவிலேயே கழிக என்று எனக்குக் கூறுபவள் போல், தன் முகத்தின் குறிப்புக் காட்டி அறி வித்து, ஒவியத்தின் முகத்தில் காணப்படும் அதன் உள்ளக் குறிப்பைப் போன்று என் முகத்தில் தோன்றும் மெய்ப்