பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

பாட்டால் தோன்றும் கருத்தை உணர்ந்தாள் அதனை உணர்ந்த அளவில் கண்ணில் நீர் பெருகிக் கண் பாவையை மறைத்துத் ததும்பும் துன்பக் கண்ணிருடன் கூடிய நோக்கத் துடன், தன் மார்பில் அணைத்துக் கொண்ட மகனின் புல்லிய தலையில் சூட்டப் பட்ட் தூய நீரில் தோன்றிய செங்கழுநீர் மாலையை மோந்து நெடு மூச்செறிந்தாள் அப்போது அம் மாலையில் உள்ள மலர் பவளம் போன்ற வடிவை இழந்தது அக் காட்சியைக் கண்டு யாம் இவளைப் பிரிந்து செல்வதைத் தவிர்ந்தேம்

ஆகவே, யாம் பக்கத்தில் இருக்கவும், நாம் பிரிந்து செல்வோம் என இவ்வாறு நினைந்து வருந்தும் இயல்புடைய நம் காதலி, யாம் நினைத்த படியே பிரிந்து செல்வோம் என்றால் உயிர் வாழாள் என்பது திண்ணம் எனவே நாம் செல்லுவது எங்ங்னம்?” என்று பொருள் வயிற் பிரியக் கருதிய தலைவன் தன் நெஞ்சிற்குச் சொன்னான்

300. கண்டதுண்டோ என் மகனை? முலை முகம்செய்தன; முள் எயிறு இலங்கின; தலை முடிசான்ற தண் தழை உடையை, அலமரல் ஆயமொடு யாங்கனும் படாஅல்; மூப்புடை முது பதி தாக்கு அணங்கு உடைய, காப்பும் பூண்டிசின்; கடையும் போகலை, பேதை அல்லை - மேதைஅம் குறுமகள்! பெதும்பைப் பருவத்து ஒதுங்கினை, புறத்து என, ஒண் சுடர் நல் இல் அருங் கடி நீவி, தன் சிதைவு அறிதல் அஞ்சி - இன் சிலை ஏறுடை இனத்த, நாறு உயிர் நவ்வி - வலை காண் பிணையின் போகி, ஈங்கு ஒர் தொலைவு இல் வெள் வேல் விடலையொடு, என் மகள் இச் சுரம் படர் தந்தோளே, ஆயிடை, அத்தக் கள்வர் ஆ தொழு அறுத்தென, பிற்படு பூசலின் வழிவழி ஒடி, மெய்த் தலைப்படுதல் செல்லேன் இத் தலை, நின்னொடு வினவல் கேளாய்! - பொன்னொடு