பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை த. கோவேந்தன் : 195

புலிப் பல் கோத்த புலம்ப மணித் தாலி ஒலிக் குழைச் செயலை உடை மாண் அல்குல், ஆய் சுளைப் பலவின் மேய் கலை உதிர்த்த துய்த் தலை வெண் காழ் பெறுஉம் கல் கெழு சிறுகுடிக் கானவள் மகளே. - கயமனார் அக 7 இனிய முழக்கம் உடைய ஆண் மானான இனத்தை உடைய உயிர்ப்புத் தோன்றும் இளைய மானே, என் மகளை நோக்கி அறிவை உடைய என் இளைய மகளே, உனக்குக் கொங்கைகள் அரும்பின முள் போன்ற பற்கள் விழுந்து புதிய பற்கள் தோன்றி ஒளிவிட்டன நின் தலையில் கோதை முடிப்பதற்கு உடையாக உடையை, ஆதலால் நீ சுழன்று திரியும் ஆயத்தாருடன் எங்கும் செல்லாதே பழமை மிக்க இவ் ஊரின் இடங்கள் தாக்கி வருந்தும் தெய்வங்களை உடையன ஆதலால் இனி நீ நின்னையே காக்கும் காவலை யும் மேற்கொள்க நம் முன்றிலின் பக்கத்தும் போகாதே இனி நீ பேதைப் பருவத்தை உடையவள் அல்லை பெதும்பைப் பருவத்திலும் வெளியே போனாய்’ என்று யான் கடிந்து கூறினேன் அதைக் கேட்டுப் பொன்னால் ஆன புலிப்பல் கோக்கப்பட்ட தனிமனித் தாலியையும் தழைத்த அசோகின் தளிரால் ஆன தழையுடையால் சிறப்புற்ற அல்குலையும் உடைய, பலாவினது சிறந்த சுளைகளை உண்ணும் முசுக் கலைகளால் உதிர்க்கப்பெற்ற வெண்மையான பலா மரத்தின் வித்துகள் எங்கும் எளிதாகப் பொறுக்கி எடுக்கின்ற மலை யில் பொருந்திய சிறு குடியை யுடைய, கானவன் மகளான என் மகள் தன் குற்றத்தை நான் அறிந்தற்கு அஞ்சி மிக்க ஒளியுடைய எங்கள் நல்ல இல்லத்தின் அரிய காவலைக் கடந்து, வலையைக் கண்ட பெண்மான் அதனிற்று தப்பி ஒடுமாறு போலத் தோல்வியறியாத வேலையுடைய ஒரு தலைவனுடன் இக் காட்டில் உள்ள இந்த வழியில் சென்று விட்டாள் அப்போதே அரிய காட்டில் கள்வர் பசுக்களைத் தொழுவினின்று கவர்ந்து கொண்டு, செல்லவும், அவர் பின்னால் சென்று கரந்தையார் செய்யும் போரைப் போல, பின்னால் விரைந்து சென்றேன் அவள் உருவத்தைக் காணேன் ஆதலால் மானே, அவளை நீ பார்த்தாயோ?