பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

என்று நின்னைக் கேட்பேன் அவர்கள் சென்ற நெறியை எனக்குக் கூறுவாயாக’ என்று மகட் போக்கிய தாய் சுரத்திடைச் சென்று மானின்ைக் கண்டு வினவினாள்

301. காதலிபாற் சென்ற என் நெஞ்சம்!

கொல் வினைப் பொலிந்த, கூர்ங் குறும் புழுகின், வில்லோர் தூணி வீங்கப் பெய்த அப்பு நுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பை, செப்பு அடர் அன்ன செங் குழை அகம்தோறு, இழுதின் அன்ன தீம் புழல் துய்வாய் உழுது காண் துளைய ஆகி, ஆர் கழல்பு, ஆலி வானின் காலொடு பாறி, துப்பின் அன்ன செங் கோட்டு இயவின், நெய்த்தோர் மீமிசை நிணத்தின் பரிக்கும் அத்தம் நண்ணிய அம் குடிச் சீறுர் - கொடு நுண் ஒதி மகளிர் ஒக்கிய தொடி மாண் உலக்கைத் தூண்டு உரல் பாணி, நெடு மால் வரைய குடிஞையோடு இரட்டும் குன்று பின் ஒழியப் போகி, உரம் துரந்து, ஞாயிறு படினும், ஊர் சேய்த்து எளாது. துனை பரி துரக்கும் துஞ்சாச் செலவின் எம்மினும், விரைந்து வல் எய்தி, பல் மாண் ஓங்கிய நல் இல் ஒரு சிறை நிலைஇ பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவி, கன்று புகு மாலை நின்றோள் எய்தி, கை கவியாச் சென்று, கண் புதையாக் குறுகிப், பிடிக் கை அன்ன பின்னகம் தீண்டித் தொடிக் கை தைவரத் தோய்ந்தன்றுகொல்லோ - நாணொடு மிடைந்த கற்பின், வாள் நுதல், அம் தீம் கிளவிக் குறுமகள் மென் தோள் பெற நசைஇச் சென்ற என் நெஞ்சே?

- கல்லாடனார் அக 9 "நாணம் என்ற குணத்துடன் கலந்துள்ள கற்பு என்ற பண்பையும் ஒளியுடைய நெற்றியையும் அழகிய இனிய