பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை த. கோவேந்தன் : 197

சொல்லையும், இளமையையும் உடைய எம் தலைவியின் மென்மையான தோளைப் பெற்று மகிழ்தற்கு மிகவும் விரும்பி எமமைக் கைவிட்டுச் சென்றது எமது உள்ளம் வில் வீரர் தம் அம்புக்கூடு நிறைய இட்ட கொல்லும் தொழிலால் சிறப்புப் பெற்ற கூர்மையும் குப்பியும் உடைய அம்புகளின் நுனியைப் போன்று இருப்பை மொட்டுகள் மலர்ந்தன இருப்பையின் ஒருங்கே செறிந்து அரும்பியுள்ள செப்புத் தகட்டைப் போன்ற சிவந்த தளிர்களிடந்தோறும் நெய் போன்ற இனிய துளையையுடைய பூக்கள் விளங்கின. அவை தம் ஆர்க்குக் கழன்று, காம்பினை விலக்கிக் காணத் தக்க துளையை உடையனவாய் விளங்கின. அவை வானத்தினின்று விழும் பனிக்கட்டியைப் போல் காற்றாலே சிதறுண்டு பவளம் போன்ற சிவந்த மேட்டு வழிகளில் குருதியின் மேல் கிடக்கும் நிணங்கள் போன்று விரவிக் கிடக்கும் அரிய வழிகளை யுடைய சிறிய ஊர் அந்த ஊரில், வளைந்த கூந்தலை உடைய மகளிர் அவர்கள் பூணால் சிவந்த உலக்கையால் மலை நெல்லைக் குற்றும் உரலினின்றும் எழும் ஒலி, பெரிய பக்க மலையில் உள்ள ஆந்தை ஒலியுடன் மாறி மாறி ஒலிக் கும் குன்றுகள், அவை பிற்பட்டுக் கிடக்கச் சென்று, கதிரவன் மறையினும் ஊர் தொலைவில் உள்ளது எனக் கருதாமல் விரைவில் செல்லும் குதிரைகளை மேலும் விரை வாகச் செலுத்தவேண்டும் எனச் செலுத்துகின்ற மடிதல் இல்லாத போக்கை உடைய எம்மைவிட எம் மனம் விரைந்து போய், பல கட்டுக்களால் சிறப்புற உயர்ந்த நல்ல வீட்டில் ஓரிடத்தில் நின்று என் வருகையை நினைந்து நற்குறியைக் குறிக்கும் பக்கத்தில் பல்லி சொல்லும் போதெல்லாம் அதனைப் போற்றி வாழ்த்திப் பசுவின் கன்றுகள் இல்லத்துக்கு வரும் மாலைக் காலத்தே நின்ற நம் தலைவியை அடைந்து, கையைக் கவித்துக்கொண்டு போய் நெருங்கி அவளது கண்ணைப் புதைத்துப் பெண் யானையின் துதிக்கையைப் போன்ற கூந்தலைத் தீண்டி அவளது வளையல் அணிந்த கை பொருந்தத் தழுவியதோ!' என்று வினைமுற்றி மீண்ட தலைவன் தேர்ப்பாகனிடம் கூறினான்