பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 .ே அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

அடைந்து இசைக்கும், வறண்ட பாலை நிலத்தையும் வேறு மொழியே பேசும் மக்கள் வாழும் பல மலைகளையுடைய நாடுகளையும் கடந்து சென்றாலும், ஒளியுடைய தொடி உடையாளின் காதல் கெழுமிய குணம் நினைவில் தோன்றி வருத்துகின்றது இனிச் செய்வது என்னோ?” என்று இடை நிலத்து கலங்கிக் கூறினான்

22. அவளை நினைந்தால் குளிர்ச்சி நெடுங் கழை முளிய வேனில் நீடிக், கடுங் கதிர் ஞாயிறு கல் பகத் தெறுதலின், வெய்ய ஆயின, முன்னே, இனியே, ஒள் நுதல் அரிவையை உள்ளுதொறும் தண்ணிய ஆயின, சுரத்திடை ஆறே. - ஐங் 322 “ஒளிமிகுந்த நெற்றியையுடைய அரியவளைப் பிரிந்து செல்லத் துணிந்த காலத்துச் சுரத்திடையே உள்ள வழிகள், நீண்ட மூங்கில்கள் உலரும்படி வேனில் நீளுதலால் மிக்க கதிர்களையுடைய ஞாயிறு, கற்களும் பிளந்திடுமாறு காய்வ தால், முன்பு கொடியனவாய் விளங்கின. அவளைப் பிரிந்து இச் சுரத்திடை அடையும் இப்பொழுதில், அவை, அவளை நினைக்குந்தோறும் குளிர்ந்தனவாய் உள்ளன” என்று தலைவன் இடை வழியில் அவளை நினைந்து சொன்னான்.

23. காதலியின் பண்புகள் வழியைக் கடந்துவந்தன!

வள் எயிற்றுச் செந்நாய் வயுவு உறு பிணவிற்குக் கள்ளிஅம் கடத்திடைக் கேழல் பார்க்கும் வெஞ் சுரக் கவலை நீந்தி, வந்த - நெஞ்சம்! நீ நயந்தோள் பண்பே. - ஜங் 323 தலைவன், 'நெஞ்சே! நீ காதலிக்கும் தலைமகளின் பண்புகள், கூர்மையான பற்களையுடைய செந்நாய் கருவுரு கால நோய் கொண்டு வருந்தும் தன் பெண் நாய் பொருட்டுக் கள்ளி நிறைந்த சுரத்திடையே பன்றியின் வரவை எதிர் பார்த்திருக்கும் கொடிய காட்டில் கவர்த்த வழிகள் பலவும் கடந்து வந்தன” என்று தன் நெஞ்சுக்குச் சொன்னான்