பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

302. இரவுக் குறிவரின் தலைவி உயிர் வாழாள்

வானம் ஊர்ந்த வயங்கு ஒளி மண்டிலம் நெருப்பு எனச் சிவந்த உருப்பு அவிர் அம் காட்டு, இலை இல மலர்ந்த முகை இல் இலவம் கலி கொள் ஆயம் மலிபு தொகுபு எடுத்த அம் சுடர் நெடுங் கொடி பொற்பத் தோன்றிக், கயம் துகள் ஆகிய பயம் தபு கானம், எம்மொடு கழிந்தனர்.ஆயின், கம்மென வம்பு விரித்தன்ன பொங்கு மணற் கான் யாற்றுப் படு சினை தாழ்ந்த பயில் இணர் எக்கர் மெய் புகுவு அன்ன கை கவர் முயக்கம் அவரும் பெறுகுவர் மன்னே! நயவர, நீர் வார் நிகர் மலர் கடுப்ப, ஒ மறந்து அறு குளம் நிறைக்குந போல, அல்கலும் அழுதல் மேவல ஆகிக், பழி தீர் கண்ணும் படுகுவமன்னே! - ஒளவையார் அக 11 "வானில் உலவும் விளங்கும் ஒளியையுடைய ஞாயிற்று மண்டிலமானது தீயைப் போன்று சுட்டதால் வெப்பமானது கானல் நீராகத் திகழும் காடு அக் காட்டில் இலைகள் இல்லாமல் அரும்பு இல்லாமல் மலர்ந்த இலவ மரங்கள், ஆரவாரம் உடைய மகளிர் கூட்டம் மகிழ்ந்து எடுத்த அழகிய கார்த்திகை விளக்குகளின் ஒழுங்கு போல் விளங் கின்றன அங்குக் குளங்கள் துகள் படிந்திருக்கும் மழை வளம் தவறிய காடு அத்தகைய காட்டில் நம் தலைவர் நம்மை உடன் அழைத்துச் சென்றால், மார்புக் கச்சினை ஒருவகை ஆடை விரித்து வைத்தாற்போன்று விளங்கும் மணல் மிக்க காட்டாற்றின், மிகுந்த பூங் கொத்துக்களையுடைய பெரிய மரக்கிளைகள், தாழ்ந்த மணல் மேட்டில், உடல்கள் ஒன்றில் ஒன்று புகுவதைப் போன்று கை விரும்பும் அணைதலை அன்பு தோன்ற அவரும் பெறுவர் என் குற்றம் இல்லாத கண்களும் நீரைச் சிந்தும் மலரைப் போன்று ஒழிதலின்றி, நீர் வற்றிய குளத்தை நிறைக்கும் கால்வாய்களைப் போன்று, நாள்தோறும் அழுது கண்ணிர் வடித்தலைப் பொருந்தாதன