பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை உரை த. கோவேந்தன் 等 201

கொம்மை.அம் பசுங் காய்க் குடுமி விளைந்த பாகல் ஆர்கைப் பறைக் கட் பீலித் தோகைக் காவின் துளுநாட்டு அன்ன, வறுங் கை வம்பலர்த் தாங்கும் பண்பின் செறிந்த சேரிச் செம்மல் மூதுர், அறிந்த மாக்கட்டு ஆகுகதில்ல - தோழிமாரும் யானும் புலம்ப, சூழி யானைச் சுடர்ப் பூண் நன்னன் பாழி அன்ன கடியுடைய வியல் நகர்ச் செறிந்த காப்பு இகந்து, அவனொடு போகி அத்த இருப்பை ஆர் கழல் புதுப் பூத் துய்த்த வாய, துகள் நிலம் பரக்க, கொன்றை அம் சினைக் குழற்பழம் கொழுதி, வன் கை எண்கின் வய நிர்ை பரக்கும்இன் துணைப்படர்ந்த கொள்கையொடு ஒராங்கு, குன்ற வேயின் திரண்ட என் - மென் தோள் அஞ்ஞை சென்ற - ஆறே!

- மாமூலனார் அக 15 "தோழியரும், அன்னையான யானும், தனிமை அடைந்து வருந்த எங்களைக் கைவிட்டுப் போனாள் முகபடாத்தை உடைய யானையையும், ஒளிரும் அணிகலன்களையும் உற்ற நன்னன் என்ற குறுநில மன்னனின் தலைநகரம் பாழி அந் நகரத்தைப் போன்ற காவலையுடையது எம் இல்லம் இதில் உள்ள செறிந்த காவலையும் கடந்து தலைவனுடன் புறப் பட்டுத் தன் இனிய துணைவனை நினைந்த எண்ணத்தால் ஒருங்கு கூடி மலை மூங்கிலைப் போல் திரண்ட மென்மை யான தோளையுடைய என் மகள் சென்றாள் சென்று அடைந்ததும், அரிய சுரத்தில் உள்ள இருப்பை மரத்தி 'புதிய பூக்களைத் தின்ற வாயை உடையனவாய் நிலத் தூசி பறக்கச் சென்று கொன்றையின் கிளைகளில் Aiள் குழலைப் போன்ற காய்களைக் கோதி, வலிய கைகள்ையுண்ட கரடி களின் கூட்டம் பரந்து செல்லும் இயல்புன்ட்ய்து அவள் சென்ற நெறி அந் நெறி, எமது மிக்க விருப்ப்ம்"கிை கூடுவ தாயின் மெய்ம்மை பேசுவதால் சிறந்த பெரிய அணிகளை