பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை த. கோவேந்தன் : 203

யருடன் கழங்காட்டம் ஆடினாலும், தாயே, என் உடல் வருந்துகின்றது என்று தளர்ந்து வியர்வை பொருந்திய நெற்றியுடையவளாய் என்னுடல் குளிருமாறு என்னைத் தழுவிக் கொள்வாள் என் மகள் அந்தோ, அஃது இப்போது கழிந்தது அத்தகைய இயல்புடையவள் வளையலை அணிந்த தோழியரையும் எம்மையும் நினைத்துப் பாராதவளாய், மிக்க புகழையுடைய தன் தந்தையின் அரிய காவலைக் கடந்து சென்றாள் சென்று, 'கல்’ என்ற ஓசையுடன் ஒர் ஊரே எழுந்து போவதைப் போன்ற அச்சம் மிகுந்த, செல்லுதலை யுடைய கொடிய கோல்களையுடைய உப்பு வாணிகர் நீர் இல்லாத அரிய இடங்களில் தடைப்படும் போதெல்லாம் தம் காளைகளை அதட்டி ஒட்டுபவர். அங்கனம் ஒட்டும் தெளிந்த ஒலியானது நெடிய பெரிய மலையிலே தாக்குண்டு எதிரொலிக்கும் கடும் வெயிலில் முறுகிய மூங்கில்கள் மிகுந்து வளர்ந்துள்ள பக்க மலையிடங்களையுடையது பெரிய ஆண் யானைகள் உராய்ந்ததால் சேற்று மண்ணை யுடைய அடிப் பகுதியைக் கொண்ட யா மரங்களையுடையது அரிய பாலை. அதன் பிளவுபட்ட வழிகளில் பொருந்திய பக்கங்களில், நீண்ட அடியைக் கொண்ட இலவ மரத்தின் முதிர்ந்த பல மலர்கள், விழாக்களைத் தன்னிடத்தே கொண்ட பழைய வெற்றியுடைய முதிய ஊரில், நெய்யை வார்த்த விளக்கின் சுடர் விழுவதைப்போல் விழும்படி காற்று வீசுவ தால் எஞ்சியுள்ளவை சிலவாகி, விடியற் காலத்துக் காணப் படும் விண் மீன் போல் தோன்றும் இத்தகைய இயல் புடைய முகில்கள் தங்கும் பெரிய மலைகள் குறுக்கிட்டு நிற்கும் காட்டு வழியில் சென்றாள் என் மகள் . -

அங்ங்னம் அவள் செல்வதற்கு, அயலவரின் மனத்தைத் தனக்கே உரியதாகப் பெற்ற என் சிறிய மூதறிவில்ன்யுடைய வளின் சிலம்பு அணிந்த சிறிய அடிகள் வல்லமை உண்டயன்ள்ே? என்று வினவினாள் மகட் போக்கிய செவிலித் தாய

306. மறவாதே எம்ஸ்

அன்று அவன் ஒழிந்தன்றும் இஜடிேவந்து தனி, வருந்தினை - வாழி, என் நெஞ்சே! அருந்து இருந்து