பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 .ே அனபொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

உயா விளி பயிற்றும், யா உயர், நனந்தலை, உருள் துடி மகுளியின் பொருள் தெரிந்து இசைக்கும் கடுங் குரற் குடிஞைய நெடும் பெருங் குன்றம், எம்மொடு இறத்தலும் செல்லாய், பின் நின்று, ஒழியச் சூழ்ந்தனைஆயின், தவிராது, செல் இனி, சிறக்க, நின் உள்ளம் வல்லே மறவல் ஒம்புமதி, எம்மே - நறவின் சேயிதழ் அனைய ஆகி, குவளை மா இதழ் புரையும் மலிர் கொள் ஈர் இமை, உள்ளகம் கனல உள்ளுதொறு உலறி, பழங்கண் கொண்ட, கலிழ்ந்து வீழ், அவிர் அறல் வெய்ய உகுதர, வெரீஇ, பையென, சில் வளை சொரிந்த மெல் இறை முன்கை பூ வீ கொடியின் புல்லெனப் போகி, அடர்செய் ஆய் அகல் சுடர் துணை ஆக, இயங்காது வதிந்த நம் காதலி உயங்கு சாய் சிறுபுறம் முயங்கிய பின்னே!

- பொருந்தில் இளங்கீரனார் அக 19 “என் நெஞ்சே, வாழி! நீ நாம் புறப்படும் நாளன்று நான் வரமாட்டேன் என்று சொல்லி இல்லத்திலேயே தங்கி விட்டாயுமில்லை இத்துணையும் வந்து மிகுதியாக வருத்தம் அடைந்தாய் பருந்து, தங்கி வழிச் செல்பவர் வருத்தம் அடையும் படியான ஓசையைப் பலகாலும் செய்யும் யா மரங்கள் உயர்ந்த அகன்ற இடங்கள் அங்கு உருளும் இழுகு பறையின் ஒசையினைப் போல் பொருள் தெரிய ஒலிக்கும் கடுமையான குரலைக் கொண்ட ஆந்தைகள் உள்ள நீண்ட பெரிய மலை இவற்றை எம்முடன் தொடர்ந்து வந்து கடக்கவும் செய்ய மாட்டாய் பின்னால் தங்கி விட எண்ணு வாயானால் தடை இல்லாது இப்போதே விரைவாகப் போவாயாக! உன் உள்ளம் எண்ணியது நிறைவேறுவதாகுக! முன்பு குவளை மலரின் கரிய இதழைப் போன்ற நீர் மிகுதல் கொண்ட கண்களின் இமை, பின்பு நறவம் பூவின் சிவந்த இதழைப் போன்று விளங்கி உள்ளம் கொதித்தலால் நினைக்கும் போதெல்லாம் வ்ற்றித் துன்பம் கொள்வதற்குக்