பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை த. கோவேந்தன் : 205

காரணமான விரைந்து விழுகின்ற கண்ணிர்த் துளிகள் வெம்மை உடையனவாய்ச் சொரிய அதனால் அவள் தன் நிலைமை மற்றவர் அறிவர் என்று அஞ்சி, நாம் பிரிந்த போதே கழன்று விழுந்த வரிகளையுடைய முன் கைகள், மலர்கள் உதிரப் பெற்ற பூங்கொடிகள் போல் பொலிவின்றி விளங்கு மாறு மெல்லச் சென்று பொன் தகட்டால் ஆன அழகிய அகலிடத்துத் தான் ஏற்றிய விளக்கே துணையாய், எங்கும் இயங்க வன்மையற்று ஒரிடத்தே தங்கியுள்ளாள் இத்தகைய நம் காதலியின் வருந்தி மெலிந்த பிடரைத் தழுவிப் பின்பு எம்மை மறத்தலை நீக்குவாயாக’ என்று பொருள் தேடும் நெஞ்சினன், பிரிந்த தலைவன், தலைவியின் நலனை நயந்து நினைந்த நெஞ்சுக்குக் கூறினான்

307. என்னோடு இப்போதே வருக

மனை இள நொச்சி மெளவல் வால் முகைத் துணை நிரைத்தன்ன, மா வீழ், வெண் பல், அவ் வயிற்று, அகன்ற அல்குல், தைஇத் தாழ் மென் கூந்தல், தட மென் பணைத் தோள், மடந்தை மாண் நலம் புலம்பச், சேய் நாட்டுச் செல்லல் என்று, யான் சொல்லவும், ஒல்லாய், வினை நயந்து அமைந்தனை ஆயின், மனை நகப் பல் வேறு வெறுக்கை தருகம் - வல்லே எழு இனி, வாழி, என் நெஞ்சே - புரி இணர் மெல் அவிழ் அம் சினை புலம்ப வல்லோன் கோடு அறை கொம்பின் வீ உகத் தீண்டி, மராஅம் அலைத்த மண வாய்த் தென்றல், கரம் செல் மள்ளர் கரியல் தூற்றும் என்றுழ் நின்ற புன் தலை வைப்பில், பருந்து இளைப்படுஉம் பாறு தலை ஒமை இருங் கல் விடரகத்து, ஈன்று இளைப்பட்ட, மென் புனிற்று அம் பிணவு பசித்தெனப் பைங் கண் செந்நாய் ஏற்றை கேழல் தாக்க, இரியற் பிணவல் தீண்டலின், பரீஇச் செங் காய் உதிர்ந்த பைங் குலை ஈந்தின்