பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : 209

உரைப்ப போல, ஊழ் கொள்பு கூவ, இனச் சிதர் உகுத்த இலவத்து ஆங்கண், சினைப் பூங் கோங்கின் நுண் தாது பகர்நீர் பவளச் செப்பில் பொன் சொரிந்தன்ன, இகழுநர் இகழா இள நாள் அமையம் செய்தோர் மன்ற குறி” என, நீ நின் பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப, வாராமையின் புலந்த நெஞ்சமொடு, நோவல், குறுமகள் நோயியர், என் உயிர் என, மெல்லிய இனிய கூறி, வல்லே வருவர் வாழி - தோழி! - பொருநர் செல் சமம் கடந்த வில் கெழு தடக் கைப் பொதியிற் செல்வன், பொலந்தேர்த் திதியன், இன் இசை இயத்தின் கறங்கும் கல்மிசை அருவிய காடு இறந்தோரே.

- ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் அக 25 "தோழியே, நீண்ட கரையையுடைய காட்டாற்றின் விரைவு மிக்க நீர் வறண்டிட, விளங்கும் அறலின் தன்மை கொண்ட மணல் பரந்த் அகன்ற துறையிடத்தில் உள்ள குளிர்ந்த மடுக்கள் பொருந்திய சோலைகளில் எல்லாம் காஞ்சி மரத்தின் அழகிய தாதுகளைக் கொண்ட மலர்கள் மிக உதிர்ந்துள்ள மணல் மேடுகள் புதிய மணம் கமழ விளங்கும் மாமரத்தின் தளிரைத் தின்ற நீலமணி போன்ற கரிய நிறமுடைய குயில்கள், இனிய தம் நாவினால் பிணக்கம் கொண்ட காதலர்க்கு இரங்கி நாள் தோறும் அந்தம் பிணக்கைத் தீர்க்கத் தாம் நடு நிலைமை மேற்கொண்டு.ஆறம் கூறுவது போன்று மாறி மாறிக் கூவும் கூட்டமான வண்டுகள் மலர்கள் நிறைந்த கிளைகளையுடைய கோங்க மர்த்தி ஆமது உதிர்த்து விட்ட நுண்ணிய தாதுகள் இலவ மலரில் வீழ்ந்தன. அவை பொன் பொடி விற்பவர் பவளச் செப்பில்,அ டொன் பொடியை வைத்தாற் போன்று தோன்றும். பிரிவ்ால் அடையும் துயர்களைப் புறக்கணித்துப் பிரிபுவரும் அங்ஙனம் பிரிய ஒண்ணாத இளவேனில் பருவத்தை அன்றோ தாம் மீண்டு வரும் பருவமாகக் குறித்துச் சென்றார் எனக் கூறி, நீ