பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

இரு வேறு ஆகிய தெரி தகு வனப்பின் மாவின் நறு வடி போல, காண்தோறும் மேவல் தண்டா மகிழ் நோக்கு உண்கண் நினையாது கழிந்த வைகல், எனையது.உம், வாழலென் யான்" எனத் தேற்றி, பல் மாண் தாழக் கூறிய தகைசால் நல் மொழி மறந்தனிர் போறிர் எம்” எனச் சிறந்த நின் எயிறு கெழு துவர் வாய் இன் நகை அழுங்க வினவல் ஆனாப் புனையிழை - கேள் இனி - வெம்மை தண்டா எரி உகு பறந்தலை, கொம்மை வாடிய இயவுள் யானை நீர் மருங்கு அறியாது, தேர் மருங்கு ஓடி அறு நீர் அம்பியின் நெறிமுதல் உணங்கும் உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கு அருங் கடத்திடை, எள்ளல் நோனாப் பொருள் தரல் விருப்பொடு நானுத் தளை ஆக வைகி, மாண் வினைக்கு உடம்பு ஆண்டு ஒழிந்தமை அல்லதை மடம் கெழு நெஞ்சம் நின் உழையதுவே

- வெள்ளாடியனார் அக 29

“தலைவ, தான் தொடங்கிய வினையைக் கைவிடாத தளர்ச்சியற்ற வலிய முயற்சியினை உடையதும், பட்டினியாய் இருந்து உயிர்விட நேரிடினும் தான் வீழ்த்திய களிறு இடப் பக்கம் வீழ்ந்தால் அதைத் தின்னாதது புலி அப் புலியினை விட மேம்பட்ட தளர்ச்சியற்ற ஊக்கம் மேன்மேல் மிகப் பொருளிட்டுதற்குப் பிரிந்து சென்றீர், அக் காலத்தில், "கத்தி யால் அறுக்கப் பெற்று இரண்டு பிளவாக விளங்கும் அழகையுடைய மாம் பிஞ்சின் பிளவைப் போன்ற, கானுந் தொறும், களிப்புக் குறையாத பார்வையையுடைய மை பூசப்பெற்ற கண்களை நினைக்காமல் கழியும் நாளில் யான் சிறிதும் உயிர் தாங்கியிரேன்’ எனக் கூறித் தெளிவித்துப் பல மாண்புகளும் பொருந்தக் கூறிய அழகு மிக்க நல்ல மொழியை எம்மிடம் மறந்து விட்டீர் போலும் எனச் சிறந்த நின் பற்கள் விளங்கும் பவளத்தை ஒத்த வாயின் இனிய நகை கெட