பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

தமிழ் கெழு மூவர் காக்கும் மொழி பெயர் தேஎத்த பல் மலை இறந்தே.

- மாமூலனார் அக 31 தோழியே, தீயைப் போன்று சிவந்த வெம்மையுடைய ஞாயிறு விளைநிலத்தில் உள்ள பயிரைத் தீய்ந்தொழிய அழித்தது. அதனால் இன்று இவ் உலகம் குறைந்து நிலம் தன் நிலையினின்று பிறழும் காலம் வந்ததோ எனக் கூறு மாறு நிலை பெறும் உயிர்கள் இறந்து போதற்கு ஏதுவாக மழை பெய்யாது ஒழிந்த காலம் இக் காலத்தில், இலைகள் இல்லாமல் மிக ஓங்கிய நிலையையுடைய யா மரத்தின் மேல் உள்ள கழுகுகள் தம் குஞ்சுகளுக்கு, கற்களை உடைய சிறிய ஊரில் உள்ள மறவர்கள் அம்புகளை எய்வதால் பொலி வில்லாத வழிகள் தோன்றும் செவ்வரி மாலை அணியப் பட்டுக் கிடந்தாற் போன்ற நிண ஒழுங்கும் புண்ணினின்று வெளிப்படும் குருதியும் தம்மைச் சூழக் கிடந்தவரின் கண் களைக் கவர்ந்து போய்க் கொடுக்கும்

அத்தகைய கழுகுகள் பொருந்திய காட்டைக் கடந்தது, விற்போரில் பகைவரை அழித்து அந்த வெற்றியால் அடை யும் திறைப் பொருள்களை உண்டு வாழ்கின்ற வலிய ஆண்மை பொருந்திய வாழ்க்கையையுடையவர் தமிழ் நாட்டை ஆளும் மூவர் அம் மூவராலும் பாதுகாக்கப் பெறும் வேற்று மொழியையுடைய நாடுகளில் உள்ள பல மலை களையும் கடந்து தலைவர் சென்றார் என்று அவரைத் தூற்றார் இவள் ஆற்றாது வருந்தினாள் என்று என்னையே பழிக்கின்றனர். அதற்கே யான் வருந்துகின்றேன் என்று தலைவி தோழிக்குக் கூறினாள்.

313. வினைவயின் போவோம் நெஞ்சே வா வினை நன்றாதல் வெறுப்பக் காட்டி, மனை மாண் கற்பின் வாணுதல் ஒழிய, கவை முறி இழந்த செந் நிலை யாஅத்து ஒன்று ஒங்கு உயர் சினை இருந்த, வன் பறை, வீளைப் பருந்தின் கோள் வல் சேவல் வளை வாய்ப் பேடை வரு திறம் பயிரும்