பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : 215

இளி தேர் தீம் குரல் இசைக்கும் அத்தம் செலவு அருங்குரைய என்னாது, சென்று, அவள் மலர் பாடு ஆன்ற, மை எழில், மழைக் கண் தெளியா நோக்கம் உள்ளினை, உளி வாய் வெம் பரல் அதர குன்று பல நீந்தி, யாமே எமியம் ஆக, நீயே ஒழியச் சூழ்ந்தனைஆயின் - முனாஅது வெல் போர் வானவன் கொல்லி மீமிசை, நுணங்கு அமை புரையம் வணங்கு இறைப் பணைத் தோள், வரி அணி அல்குல், வால் எயிற்றோவயின் பிரியாய் ஆயின் நன்றுமன் தில்ல, அன்று நம் அறியாய் ஆயினும், இன்று நம் செய்வினை ஆற்றுற விலங்கின், எய்துவை அல்லையோ பிறர் நகு பொருளே?

- மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் அக 33 “என் நெஞ்சமே பொருள் ஈட்டும் செய்கை அறம் முதலிய நன்மை தருவதை மிகவும் எடுத்துக்கூறி, மாண்பு பொருந்திய கற்பினை உடைய ஒளி பொருந்திய நெற்றியைக் கொண்ட நம் தலைவி வீட்டில் இருக்க அவளைப் பிரியச் செய்தனை, பிரிந்தோம் பிரிந்து, வந்த வழிகள் மழை வளம் இல்லாததால் தளிர்கள் தளிர்க்காத கிளைகளையுடைய யா என்ற மரத்தில் மிக உயர்ந்துள்ள கிளையில் இருந்த வலிமை வாய்ந்த இறகையும் வீளை ஒலியையும் உட்ைய சேவற் பருந்து வளைந்த வாயையுடைய தன் பேடைப் பருந்து தன்னிடம் வருமாறு அழைக்கும் இளி என்னும் இசை போன்ற இனிய குரல் ஒலித்துக் கொண்டிருக்கும் அரிய வழிகள் அவை செல்வதற்கு அரும்ையானவை என்று புறப் பட்ட அப்போதே கூறாமல், இத்துணை தொலைவும் வந் தோம் வந்த பின்பு, தலைவியின் தன் பெருமை குறைவதற்குக் காரணமான ம்ை பூசப்பெற்ற கண்களின் மயக்கத்தைத் தரும் நோக்கத்தை நினைத்து, உளியின் வாய் போன்று கூர்மையான பரற் கற்கள் பொருந்திய வழிகளையுடைய குன்றுகள் பல வற்றையும் கடந்து வந்தோம் வந்த நாம், தனிமைப்பட நீ எம்மை விட்டு நீங்கித் திரும்பிச் செல்ல எண்ணினாய்!