பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 # அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

வெல்லும் போரைச் செய்யும் சேர மன்னனின் கொல்லி மலையின் உச்சியில் உள்ள சிறிய மூங்கிலைப் போன்ற வளைந்த முன் கையையுடைய பெரிய தோளையும், தேமல் படர்ந்த அல்குலையும், வெண்மையான பற்களையும் உடைய தலைவி இடத்திருந்து பிரியாமல் இருந்திருப்பாயானால் அது நன்றாய் இருந்திருக்கும். ஆனால் அதை நீ செய்ய வில்லையே!

யாம் தலைவியைப் பிரியும் நாளில் நம் இயல்பான வலியின்மையை அறியாய் ஆயினும் இன்று நாம் செய்யும் வினையை, இந்த இடைவழியில் வந்தபோது விலக்குவா யானால், மற்றவர் சிரிக்கத் தக்க இகழ்ச்சியை அடைவாய் அல்லையோ! எனவே, பொருள் ஈட்டச் செல்வோம்! என்னுடன் வா” என்று தலைவன் பாலை நிலத்திடையில் தன் நெஞ்சிற்குச் சொன்னான்.

314 மார்பு துணையாகத் துயிலச் செப்வானாக

ஈன்று புறந்தந்த எம்மும் உள்ளான், வான் தோய் இஞ்சி நல் நகர் புலம்பதனி மணி இரட்டும் தாளுடைக் கடிகை, நுழை நுதி நெடு வேல், குறும் படை, மழவர் முனை ஆத் தந்து, முரம்பின் வீழ்த்த வில் ஏர் வாழ்க்கை விழுத் தொடை மறவர் வல் ஆண் பதுக்கைக் கடவுட் பேண்மார், நடுகல் பிலி சூட்டி, துடிப்படுத்து, தோப்பிக் கள்ளொடு துரூஉப் பலி கொடுக்கும் போக்கு அருங் கவலைய புலவு நாறு அருஞ் சுரம் துணிந்து, பிறள் ஆயினள்ஆயினும், அணிந்து அணிந்து, ஆர்வ நெஞ்சமொடு ஆய் நலன் அளைஇ தன் மார்பு துணையாகத் துயிற்றுகதில்ல - துஞ்சா முழவின் கோவற் கோமான் நெடுந் தேர்க் கொடுங்கால் முன்துறை, பெண்ணை அம்பேரியாற்று நுண் அறல் கடுக்கும் நெறி இருங் கதுப்பின் என் பேதைக்கு, அறியாத் தேஎத்து ஆற்றிய துணையே

- குடவாயில் கீரத்தனார் அக 35