பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

     நீர் மருங்கு அறுத்த நிரம்பா இயவின் 
     இன்னாமன்ற சுரமே; 
     இனிய மன்ற, யான் ஒழிந்தோள் பண்பே - ஐங் 326 
     “வெம்மை மிக்க பாலை நிலத்தில், நிழல் உள்ள இடம்

பெற முடியாமையால் மடமை பொருந்திய மானின் அழகிய பெண்மான் தன் மறியுடன் கூடி வருந்த மழை நீரால் பக்கம் அலைக்கப்பட்டு மிகவும் சிறிய வழியையுடைய சுரம் தெளி வாகத் துன்பத்தை அளிப்பனவே ஆகும் ஆயினும் என் தலைவியின் பண்புகள் நினைக்க இன்பம் அளிப்பனவாம்” என்று தலைவன் தன் நெஞ்சுக்குள் சொன்னான்

         27. பண்புகள் செம்மை செய்தன 
  பொறி வரித் தடக் கை வேதல் அஞ்சிச், 
  சிறு கண் யானை நிலத் தொடல்செல்லா;
  வெயில் முளி சோலைய, வேய் உயர் கரனே,
  அன்ன.ஆர் இடையானும்,
  தண்மை செய்த இத் தகையோள் பண்பேl - ஐங் 327
  "புள்ளிகளையும் வரிகளையும் உடைய பெரிய கை 

வேவதற்கு அஞ்சிச் சிறிய கண்களையுடைய யானைகள் நிலத்தைத் தொட இயலாத வெயிலால் உலர்ந்த சோலை களையுடையவை மூங்கில் உயரமாய் வளர்ந்த சுரங்கள் இத் தன்மையுடைய செல்வதற்கு அரிய நெறியிலும் இவ் அழகு உடையவளின் பண்புகள் வெப்பம் தோன்றாதவாறு குளிர்ச்சியைச் செய்தன” எனத் தலைவன் தலைவியின் குணம் நினைந்து உரைத்தான்.

           28. குளிர்ச்சியும் வெம்மையே! 
   நுண் மழை தளித்தென நறுமலர் தாஅய்த்
   தண்ணிய ஆயினும், வெய்ய மன்ற - 
   மட வரல் இன்துணை ஒழியக்
   கடம் முதிர் சோலைய காடுஇறந்தேற்கே. - ஐங் 328
   "மடப்பம் உடைய என் இனிய துணைவியைப் பிரிந்து
   சுரத்தையும் அதைச் சூழ்ந்த மரச்செறிவுகளையும் உடைய காட்டைக் கடந்து வந்தேன். இத்தகைய எனக்கு நுட்பமான