பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 :ே அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

பொங்கழி முகந்த தா இல் நுண் துகள், மங்குல் வானின், மாதிரம் மறைப்ப, வைகு புலர் விடியல் வை பெயர்த்து ஆட்டி தொழிற் செருக்கு அனந்தர் வீட, எழில் தகை வளியொடு சினை இய வண் தளிர் மாஅத்துக் கிளி போல் காய கிளைத் துணர் வடித்துப் புளிப்பதன் அமைந்த புதுக் குட மலிர் நிறை வெயில் வெளிந் நிறுத்த பயில் இதழ்ப் பசுங் குடை, கயம் மண்டு பகட்டின் பருகி, காண் வர கொள்ளொடு பயறு பால் விரைஇ, வெள்ளிக் கோல் வரைந்தன்ன வால் அவிழ் மிதவை வாங்கு கை தடுத்த பின்றை, ஒங்கிய பருதிஅம் குப்பை சுற்றி, பகல் செல, மருதமர நிழல், எருதொடு வதியும் காமர் வேனில்மன் இது மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கே!

- விற்றுாற்று மூதெயினனார் அக 37 "தோழி நம் தலைவர் நம்மை மறந்து வேற்று நாட்டிலே தங்கிவிட்டார் என்பதை அறிவேன். ஆயினும், இப்பொழுது நிகழும் பருவம் யாதென்று எண்ணினாய்? இது மாண்புடைய பெண்மை நலத்தைத் துய்க்கும் துணையைப் பிரியாதார்க்கு மட்டும் ஆற்றியிருப்பதற்குரியது.

ஊர் தோறும் உள்ள ஆடல் அரங்கிலும் பாடல் அரங்கிலும் இனிய இசை ஒலிக்கும் இரவில் கள்ளைக் குடித்ததால் மிக்க களிப்பையுடைய உழவர் ஆள்களை அழைக்கும் ஆரவாரத்துடன் இருள் புலரும் விடியற் காலை யில் வைக்கோல் போரைப் பிரித்துக் கடாவிடுத்து துற்றிக் குவிக்கின்றனர். தூற்றாத பொலியினின்றும் கூடைகளால் வாரப்பட்ட நெல்லுடன் கலந்து வலியற்ற நுட்பமான துகள் கள் எழுந்து இருண்ட முகில்களைப் போன்று திசைகளை மறைக்கும்படித் துாற்றி நெல்லைக் குவிக்கின்றனர். பின்பு, தொழில் செய்தலால் வந்த இளைப்பும் கள் உண்டதால் வந்த மயக்கமும் உறக்க மயக்கமும் ஒருங்கே நீங்கும்படி, இனிய தென்றல் காற்றால் தோற்றுவிக்கப்பட்ட வளமான தளிர்