பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

அருஞ் செலவு ஆற்றா ஆர் இடை, ஞெரேரெனப் பரந்து படு பாயல் நவ்வி பட்டென இலங்கு வளை செறியா இகுத்த நோக்கமொடு, நிலம் கிளை நினைவினை நின்ற நிற் கண்டு 'இன்னகை இணையம் ஆகவும், எம்வயின் ஊடல் யாங்கு வந்தன்று? என, யாழ நின் கோடு எந்து புருவமொடு குவவு நுதல் நீவி நறுங் கதுப்பு உளரிய நன்னர் அமையத்து வறுங் கை காட்டிய வாய் அல் கனவின் ஏற்று ஏக்கற்ற உலமரல் போற்றாய் ஆகலின், புலத்தியால், எம்மே * - மதுரைச் செங்கண்ணனார் அக 39

“வண்டுகள் மொய்க்கும் கூந்தலை உடையவளே!பொருள் தேட முயலாமையை இகழ்ந்து பெர்ருள் செய்ய ஊக்கிய நெஞ்சத்துடன் பொருள் இட்டும் நெறியில் சென்று எம்மை என்றேனும் நினைத்துப் பார்த்திரோ என வினவினாய் அது போழ்து நின் முள் போன்ற கூர்மையான பற்களை யுடைய பவளம் போன்ற வாயில் நான் எதிர்பார்க்கின்ற புன் முறுவல் இல்லை. அதற்கு மாறாகத் துன்பத்தை நின் கண்ணிலும் முகத்திலும் காட்டினாய் இங்ங்ணம் எனக்குப் பொருந்தாதவற்றைக் கூறி என்னையும் வருத்தாதே! நின்ன்னிடம் பலகாலும் ஆராய்ந்து மகிழ்வதற்குக் காரணமான நின் பேரழகை நான் மறப்பேனா? மறவேன் -

அன்பையுடையவள்ே, நின்னை மற்க்கவில்லை என்பதற்கு ஒருசான்றைக் கூறுவேன், கேள்! உன்னைப் பிரிந்து நெடுந் தொலைவு சென்றேன் அங்கு மூங்கில் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து தேய்வதால் அந்த மூங்கில் சொரியும் ஒள்ளிய தீப்பொறிகள், அங்குள்ள மூங்கில் சரகுக்ள் மறையும்படி மூண்டெழுந்து செங்குத்தாய் நிற்கும் உலர்ந்த ஊகம் புல்லின் மேன்மேலும் மூண்டெழுந்து அக் காட்டையே தன்னகப் படுத்தி எரியும் தீயான்து, காற்று பரவும் இடம் எல்லாம் பரந்து சென்று எரித்தது. அங்ங்ணம் எரிப்பதால், அத் தீ தம்மையும் பற்றுமோ என அலறியழும் வாணிகக் கூட்டத்து டன் செருக்கையுடைய புலியைக் கண்டு அஞ்சிய மயக்கம்