பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : 221

உடைய யானைக் கூட்டம் பல இடத்தும் திரிதற்கு இடமான பெரிய காடு அதில் மாலையில் மறையும் காலத்துத் தாழ்ந்து தோன்றும் ஞாயிறு மறைந்தது.

அப்போது உன்னை எண்ணி எண்ணி மேலே செல்வதற் குரிய பயணமும் இல்லாது கை விட்ட அந் நிலையில் யான் அவ் வழியில் பாயலில் படுத்துறங்கினேன் அப்போது ஒரு பெண் மான் தோன்றினாற்போல் தோன்றி என்னைப் பார்க்காமல் நிலத்தினை நோக்கிய நோக்கமோடு, உடல் மெலிந்ததால் கழன்று விழும் வளையலை வீழாதபடி மேலே ஏற்றி நிறுத்தி, நிலத்தைக் காலால் கீறுதற்குக் காரணமான வருத்தம் கொண்டவளாய நின்னைக் கனவில் கண்டேன் கண்டு, இனிய நகையை உடையாய்! யான் இவ்வாறாகவும் என்னிடம் உனக்கு ஊடல் எவ்வாறு ஏற்பட்டது! நான் உன்னுடைய கடை நிமிர்ந்த அழகிய புருவங்களையும் சிறிய நெற்றியையும் கையால் தடவி நறுமணக் கூந்தலையும் கோதி உன்னைத் தழுவ முயன்றேன். அத்தகைய சமயத்தில் விழித் தெழுந்தேன் உன்னைத் தழுவுதல் போன்ற என் கையை வெறுங்கையாக்கிய பொய்யான அக் கனவை எண்ணி ஏங்கிய என் மனச் சுழற்சியை நீ அறிந்து கொள்ளவில்லை ஆதலால் என்னை நினைத்ததும் உண்டோ? என்று ஊடல் கொள் கின்றாய்” என்று பொருள் முற்றிய தலைவன் தலைவியைக் கண்டு கூறினான்

317. மாயோன் வருந்தினாளோ

வைகு புலர் விடியல், மை புலம் பரப்ப, கரு நனை அவிழ்ந்த ஊழுறு முருக்கின் எரி மருள் பூஞ் சினை இனச் சிதர் ஆர்ப்ப, நெடுநெல் அடைச்சிய கழனி ஏர் புகுத்து, குடுமிக் கட்டிய படப்பையொடு மிளிர, அரிகால் போழ்ந்த தெரி பகட்டு உழவர் ஒதைத் தெள் விளி புலம்தோறும் பரப்ப, கோழினர் எதிரிய மரத்த கவினி, காடு அணி கொண்ட காண்தகு பொழுதில், நாம் பிரி புலம்பின் தலம் செலச் சாஅய்,