பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 * அன்பொடு புணர்ந்த ஐந்தினை - பாலை

நம் பிரிபு அறியா நலனொடு சிறந்த நல் தோள் நெகிழ, வருந்தினள்கொல்லோ - மென் சிறை வண்டின் தண்கமழ் பூந் துணர் தாது இன் துவலை தளிர் வார்ந்தன்ன அம் கலுழ் மாமை கிளைஇய, நுண் பல் தித்தி, மாஅயோளே? - குன்றியனார் அக 41 “மென்மையான சிறகையுடைய வண்டுகள் பொருந்திக் கிண்டுதலால் குளிர்ந்த மணம் கமழும் மா மர மலர்க் கொத்துகளில் உள்ள தாதுடன் கூடிய தேன்துளி தளிரிலே ஒழுகியது போன்ற அழகு ஒழுகும் மாமை நிறத்தில் தோன்றிய நுட்பமான பல தேமல் புள்ளிகளை உடையோள் தலைவி.

இரவெல்லாம் இருந்த இருள் புலரும் விடியற்காலத்தில் எருமைகள் புல் மேய்வதற்குக் கொல்லைகளில் பரந்து செல்லும், முருக்க மரத்தின் பெரிய அரும்புகள் முறுக்கு அவிழ்ந்த தீயைப் போன்று மலர்ந்த பூக்களையுடைய கிளைகளில் எல்லாம் கூட்டங் கூட்டமாக வண்டுகள் ஒலிக்கும்; வயலினின்றும் அரிந்து கொண்டு போய்க் குவித்த பெரும் போர்கள் தோட்டங்களில் விளங்கும்; பின்பு ஏர் களைப் புகுவித்து நெல் விளைந்த அந்தப் புன்செய்கள் நெல் தாளான குடுமிகளைக் கொண்ட கட்டிகளை உடையனவாய் விளங்க நிலம் பிளப்ப உழுது, ஆராய்ந்த எருதுகளைக் கொண்ட உழவர்களின் ஏர் ஒட்டும் தெளிந்த ஒலி எல்லா இடங்களிலும் பரவும். அழகு பொருந்திய செழிப்பான மலர்க் கொத்துகள் தோன்றிய மரங்களை உடைய காடு அழகு பெற்ற காட்சியுடைய இந்த இளவேனிற் காலம்

இதில்; நம் பிரிவு என்பதை அறியாமல் இயற்கையழ குடன் கூடிய மிகவும் சிறப்பாக விளங்கிய தலைவியின் தோள் கள் இப்போது நாம் பிரிந்திட்ட இயல்பால் மிகவும் மெலிந்து 'நெகிழ்தலால் வருந்தினாளோ!" என்று தலைவன் பொருள்

வயின் பிரிந்தவிடத்து தலைவியை நினைந்து உரைத்தான்.

318.பிரிதலைக் கைவிட்டோம்

கடல் முகந்து கொண்ட கமஞ்சூல் மா மழை சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு, இரங்கி,