பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : 223

என்றுாழ் உழந்த புன் தலை மடப் பிடி கை மாய் நீத்தம் களிற்றொடு படிஇய, நிலனும் விசும்பும் நீர் இயைந்து ஒன்றி, குறுநீர்க்கன்னல் எண்ணுநர் அல்லது கதிர் மருங்கு அறியாது, அஞ்கவரப் பாஅய், தளி மயங்கின்றே தண் குரல் எழிலி, யாமே கொய் அகை முல்லை காலொடு மயங்கி, மை இருங் கானம் நாறும் நறு நுதல், பல் இருங் கூந்தல், மெல் இயல் மடந்தை நல் எழில் ஆகம் சேந்தனம் என்றும் அளியரோ அளியர் தாமே - அளி இன்று ஏதில் பொருட்பிணிப் போகி, தம் இன் துணைப் பிரியும் மடமையோரே!

- மதுரையாசிரியர் நல்லந்துவன்ார் அக 43 "நெஞ்சமே, குளிர்ச்சியையும் இடி முழக்கத்தையும் உடைய முகில்களையுடைய கார் காலம் வந்தது ஆதலால் கடலில் நீரை முகந்து நிறைந்த சூலையுடைய முகில்கள், ஒளி மிக்க மின்னல்களுடனே வலப்பக்கமாக எழுந்து சென்று 'ஒலித்துப் பெய்யும் முதுவேனில் வெயில் வெப்பத்தால் வருந்திய பெண் யானைகள் தத்தம் ஆண் யானைகளுடன் நீர் நிலைகளில் தம் உயர்த்திய கையை மறைக்கும் அளவுக்குப் பெருகி வரும் வெள்ளத்தில் மூழ்கி இன்பம் அடையும். நிலத்தையம் வானத்தையும் மழைநீர் பொருந்தி ஒன்றுவதால், சிறிது நீரையுடைய நாழிகை வட்டிலில் ஒழுகிய நீர் போக எஞ்சிய நீர் நிற்கும் கோடுகளை எண்ணிப் பொழுதை அறிவதே அல்லாது கதிரவன் உள்ள இடம் இதுவென அறியப்படாததால் உலகம் அச்சம் கொள்ளும் இவ்வாறாக எங்கும் பரவி மழை பொழியும்

இத்தகைய கார்ப் பருவத்தில் யாம் பொருள் வயின் பிரிவோம் எனின் யாமும் மேற்கொண்ட செயலைச் செய்து முடியோம்; நம் தலைவியும் பிரிவாற்றாமல் இறந்துபடு வாள். ஆதலால் இதை உணர்ந்த யாம் மலரைப் பறிக்கும் தோறும். மீண்டும் தழைக்கின்ற வளமிக்க முல்லையின் மணம் வாடைக் காற்றுடன் கலந்து வீசும் காடு மணப்பதைப்