பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் ; 21

மழைத் துளி பெய்தலால் நறிய மலர்கள் உதிர்ந்து பரந்து குளிர்ந்து தோன்றினாலும் எனக்கு அவை வெய்யவாகவே விளங்குகின்றன” என்று உடன் இருந்தவரிடம் கூறினான் தலைவன்.

29. காட்டைக் கடக்காது மீளுமோ?

ஆள் வழக்கு அற்ற பாழ்படு நனந் தலை வெம் முனை அருஞ் சுரம் நீந்தி, நம்மொடு மறுதருவதுகொல் தானே - செறிதொடி கழிந்து உகு நிலைய ஆக ஒழிந்தோள் கொண்ட, என் உரங்கெழு, நெஞ்சே.

- ஐங் 329 “கைகளில் பொருந்தி நின்ற வளைகள் நெகிழ்ந்து நீங்கும் நிலைமையை அடைய, மனையில் பிரிந்து தங்கும் தலை மகளால் கொள்ளப்பட்ட என் திண்மை பொருந்திய நெஞ்சம், மக்கள் நடமாட்டம் இல்லாத பாழான இடத்தையுடைய கொடிய ஆறலைப்போர் இடமான அரிய காட்டைக் கடந்து நம்முடன் வராது மீண்டு செல்வதை எண்ணுமோ? இது என்னே' என்று தலைவன் தன் நெஞ்சை நொந்து சொன்னான். 30. செல்லலை ஒழிக! வெந் துகள் ஆகிய வெயில் கடம் நீந்தி, வந்தனம் ஆயினும், ஒழிக. இனிச் செலவே - அழுத கண்ணள் ஆய்நலஞ் சிதையக் கதிர் தெறு வெஞ் சுரம் நினைக்கும் அவிர் கோல் ஆய்தொடி உள்ளத்துப் படரே. - ஐங் 330 தலைவன், "நெஞ்சே விளக்கமும் திரட்சியும் பொருந்திய ஆராய்ந்து கொள்ளப்படும் தொடியையுடையவளின் மனத் தில் உள்ள நினைவு, கண்களில் நீர் வடியவும், அழகு புனையப் பட்ட மேனி நலம் கெட்டு நீங்கவும், வெயில் சுடும் கொடிய சுரத்தில் நம் செலவின் மேற்றாய் அவளை வருத்தும் ஆதலால் வெம்மையான துகள் மிக்க வெயில் காயும் காட்டைக் கடந்து வந்திருக்கிறோம் எனினும், மேலே செல்வதைக் கை விடுக!” என்று தன் நெஞ்சை நோக்கிக் கூறினாள்