பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

நெடுங் கால் முருங்கை வெண் பூத் தாஅய், நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை, வள் எயிற்றுச் செந்நாய் வருந்து பசிப் பினவொடு கள்ளிஅம் காட்ட கடத்திடை உழிஞ்சில் உள் ஊன் வாடிய கரிமூக்கு நொள்ளை பொரி அரை புதைத்த புலம்ப கொள் இயவின், விழுத் தொடை மறவர் வில் இட வீழ்ந்தோர் எழுத்துடை நடுகல் இன் நிழல் வதியும் அருஞ் சுரக் கவலை நீந்தி, என்றும், 'இல்லோர்க்கு இல் என்று இயைவது கரத்தல் வல்லா நெஞ்சம் வலிப்ப, நம்மினும் பொருளே காதலர் காதல்; 'அருளே காதலர் என்றி, நீயே.

- சித்தலைச் சாத்தனார் அக 53 "தோழியே, என்னை ஆற்றுவிக்கும் நீ வாழி! நீ தவைரின் இயல்பை அறியமாட்டாய் இருள் நீங்க வானம் எல்லாம் விளங்குதற்குக் காரணமாய் விரைந்து செல்லும் பகலவனின் கடுமையான கதிர் எறித்திட, அதனால் நிலத்தின் பிளவு பட்ட இடங்களில் எல்லாம் நீண்ட அடிப்பகுதியை உடைய முருங்கை மரத்தின் வெண்மையான மலர்கள் உதிர்ந்து இடை வெளி மறையுமாறு பரவுகின்றன இத்தகைய நீர் இல்லாத வறட்சியுடைய செல்லுதற்கு இயலாததான நீண்ட இடம்.

கள்ளிக் காட்டை உடைய கல் நிலத்தின் மீது நிற்கும் வாகை மரத்தினை, உள்தசை வாடப் பெற்ற சுரிந்த மூக்கை யுடைய சிறிய நத்தைகள் பொருக்குடைய அடிப்பகுதி பொருந்திய மரத்தைப் போல் தோன்றுமாறு மறைக்கும் இயங்குபவர் இல்லாமையால் தனியாய் உள்ள வழி அதன் பக்கத்தில் அம்பை மறவர் வில்லில் வைத்து எய்ய இறந்த வரின் பெயரும் பீடும் எழுதிய எழுத்துகளையுடைய நடு கல்லின் இனிய நிழலில் கூர்மையான பற்களையுடைய செந்நாய் இரை பெறாமையால் வருந்தும் தன் பெட்டை நாயுடன் தங்கும் இத்தகைய நெறியைக் கடந்து, வறியவர்க்கு என்றும் இல்லை என்று கூறி இயன்றதைச் செய்யாது மறைக்காத நெஞ்சம் வற்புறுத்துவதால் நம் தலைவர் நம்மை