பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

யான் என் மகளைப் பிரிந்திருந்து, உலையில் ஊதும் துருத்தியைப் போலப் பெருமூச்சு விட்டு உள்ளம் மெலிந்து தீயில் வேவதைப் போன்று வெவ்விய நெஞ்சமோடு உறக்கமும் அடையப்பெறாமல் வெப்பம் மிக்க பாலையில் அவள் இயங்குவதை என் மனக்கண்ணில் கொணர்ந்து கனவைப் போல் கண்டிருக்குமாறு செய்தனள்

ஒளி பொருந்திய படையையுடைய கரிகாலனுடன் வெண்ணிப் போர்க்களத்தில் போரிட்டபோது பட்ட புறப் புண்ணிற்குப் பெரிதும் நாணமடைந்த சேரலாதன் என்ற சேர மன்னன், தான் தோல்வியை அடைந்த போர்க்களத்திலேயே வாள் ஏந்திய கையுடன் வடக்கு நோக்கி உண்ணா நோன்புடன் இருந்து உயிர் நீக்க இருந்தான் அதனைக் கண்ட சான்றோர், பெறுவதற்கு அரிய துறக்கத்துக்கு அவனுடன் செல்வதற்காக உயிர் நீந்தனர், அது போல, இவ் உலகத்து ஆசையை விரும்பி என்னைவிட்டுப் பிரிந்து போகாத என் உயிருடன் மாறு பட்டே நான் இங்ங்னம் வருந்துகின்றேன்” என்று புணர்ந்து டன் போன தலைவனுக்கு இரங்கிய தாய் தெருட்டிய அக்கம் பக்கத்தவர்க்குத் தலைவி உரைத்தாள்

325. அல்லும் பகலும் வருந்தினாள் சிறு பைந் தூவிச் செங் காற் பேடை நெடு நீர் வானத்து, வாவுப் பறை நீந்தி, வெயில் அவிர் உருப்பொடு வந்து, கனி பெறாஅது, பெறு நாள் யாணர் உள்ளி, பையாந்து, புகல் ஏக்கற்ற புல்லென் உலவைக் குறுங் கால் இற்றிப் புன் தலை நெடு வீழ் இரும் பிணர்த் துறுகல் தீண்டி, வளி பொர, பெருங் கை யானை நிவப்பின் தூங்கும் குன்ற வைப்பின் என்றுழ் நீள் இடை யாமே எமியம்ஆக, தாமே பசு நிலா விரிந்த பல் கதிர் மதியின் பெரு நல் ஆய் கவின் ஒரீஇ, சிறு பிர் வி ஏர் வண்ணம் கொண்டன்று கொல்லோ - கொய் சுவற் புரவிக் கொடித் தேர்ச் செழியன்