பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை த. கோவேந்தன் : 237

கருந் தாள் மிடற்ற செம் பூழ்ச் சேவல் சிறு புன் பெடையொடு குடையும் ஆங்கண் அஞ்சுவரத் தகுந கானம் நீந்தி, கன்று காணாது, புன் கண்ண, செவி சாய்த்து, மன்று நிறை பைதல் கூர, பல உடன் கறவை தந்த கடுங் கால் மறவர் கல்லென் சீறுார் எல்லியின் அசைஇ, முதுவாய்ப் பெண்டிர் செது காற் குரம்பை, மட மயில் அன்ன என் நடை மெலி பேதை தோள் துணையாகத் துயிற்றத் துஞ்சாள், வேட்டக் கள்வர் விசியுறு கடுங் கண் சேக் கோள் அறையும் தண்ணுமை கேட்குநள்கொல்? எனக் கலுழும் என் நெஞ்சே.

- கருவூர்க் கண்ணம்புல்லனார் அக 63 "என் தலைவி தன் காதலுடன் சென்றாள் என்பதால் நீ இங்ங்னம் வருந்த வேண்டா என்று கூறும் என் மகளே நீ வாழ்க! உன் ஆருயிர்த் தோழியான தலைவி நம் இல்லம் தனிமைப்பட உன்னால் கூறப்படும் அவனுடன் பெரிய மலை வழியில் சென்றமைக்காக நான் வருந்தவில்லை நான் எதன் பொருட்டு வருந்துகிறேன் என்பதைக் கேட்பாயாக :

அஞ்சாமை உடைய யானைகள் நீண்ட கையை நிலத்தில் ஊன்றி வளைந்த காலால் நிலத்தை உதைத்ததால் உண்டான பொன் தூள் கலந்த புழுதியில், இருள் நீங்கி விடிந்த விடியற் காலையில் கதிரவனின் வெயில் எங்கும் எரிக்கும் போது, கரிய மாலை போன்ற கோட்டை உடைய கழுத்தினை உடைய குறும்பூழ்ச் சேவல் பறவை தன் பெட்டையுடன் அப் புழுதியில் குளிக்கும் இத்தகைய இயல்புடைய அச்சம் தரக் கூடிய காடு அதனைக் கடந்து, தம் கன்றுகளைக் காணாதன வாய்த் துன்பம் கொண்டு செவிகளைச் சாய்த்துக் கேட்டலால் மன்றில் செறிந்து நிறைதலால் உண்டாகும் துன்பம் மிக, கரந்தையாரின் பசுக்கள் பலவற்றையும் கவர்ந்து கொணர்ந்த, விரைந்து நடக்கும் காலை உடைய வெட்சி மறவர்க்குரிய கல் என்னும் ஆரவாரத்தை உடைய சிறிய ஊரில் இரவில் தங்கி முதிய பெண்டிர் தனித்து உறைகின்ற சோர்ந்த கால்களை