பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

தலைவி-இரங்குதல் 31. துன்பம் தரும் வழி அம்ம வாழி, தோழி! அவிழ் இணர்க் கருங் கால் மராஅத்து வைகு சினை வான் பூ அருஞ் சுரம் செல்லுநர் ஒழிந்தோர் உள்ள, இனிய கமழும் வெற்பின் இன்னாது என்பஅவர் சென்ற ஆறே. - ஜங் 331 தலைவி, “தோழி, கேட்பாய் மலர்ந்த மலர்க்கொத்து களையுடைய கரிய அடியைப் பெற்ற வெண் கடம்ப மரத்தில் உள்ள கிளையின் பூத்த வெண் மலர்கள், போவதற்கு அரிய சுரத்தைக் கடந்து செல்வோர் கண்டு தாம் பிரிந்து வந்த தலைவியரை நினைந்து அழுங்குமாறு இனிய மணம் நாறும் மலையில் நம் தலைவர் சென்ற நெறி துன்பம் தரும் இயல் பினது என்று பலரும் கூறுவர்” என்று தலைவனைப் பிரிந்த வேளையில் சொன்னாள்.

32. பண்பற்ற மாக்கள்

அம்ம வாழி, தோழி! என்னது உம்

அறன் இல மன்ற தாமே - விறன்மிசைக்

குன்று கெழு கானத்த பண்பு இல் மாக் கணம்

'கொடிதே காதலிப் பிரிதல்,

செல்லல், ஐய' என்னாதவ்வே. -ஜங் 332

தலைவி தோழியை நோக்கி, "தோழியே, கேள். சிறந்த உச்சியை உடைய குன்றுகள் பொருந்திய காட்டில் உள்ள நல்ல பண்பு இல்லாத விலங்கின் கூட்டம் சிறிதும் அறிவற்ற தாகும். அதுதான், ‘ஐயனேகாதலியைப் பிரிந்து செல்வது கொடிது!’ என்று தலைவனுக்குக் கூறவில்லையே!” என்று மனம் இரங்கிச் சொன்னாள்.

33. பறவைகளை நொந்தது

அம்ம வாழி, தோழி யாவதும் வல்லாகொல்லோ தாமே - அவன