பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

உடைய சிறிய குடிலில், மடப்பத்தையுடைய மயில்போன்ற நடையால் வருந்திய பேதையானவள், அவன் தன் தோளில் கிடத்தித் துயிலச் செய்யவும் துயிலாதவளாய் வேட்டைத் தொழிலுடன் பிறர் நாட்டு ஆக்களையும் கவரும் களவுத் தொழிலை உடைய எயின மறவர் ஏறுகளைப் பற்றிக் கட்டுதற் பொருட்டு வாரால் இழுத்துக் கட்டப்பட்ட கடிய ஒலி யையுடைய கண்ணிடத்தில் அடிக்கப்படுதலால் எழுகின்ற தண்ணுமையின் ஒலியைக் கேட்டுப் பொறுத்துக் கொள் வாளோ? உயிர் நீப்பாளோ? என்ற ஐயத்தினால் கலங்கு கின்றது மனம் அந்த மனத்துக்காகவே யான் இப்போது வருந்துகின்றேன்” என்று தலைவி தலைவனுடன் சென்ற போது செவிலி தன் மகளுக்கு இவ்வாறு கூறினாள்

329. உடன்போக்கை ஏற்றுக் கொண்டார்

உன்னம் கொள்கையொடு உளம் கரந்து உறையும் அன்னை சொல்லும் உய்கம், என்னது உம் ஈரம் சேரா இயல்பின் பொய்ம்மொழிச் சேரிஅம் பெண்டிர் கெளவையும் ஒழிகம்; நாடு கண் அகற்றிய உதியஞ் சேரற் பாடிச் சென்ற பரிசிலர் போல உவ இனி - வாழி, தோழி! அவரே, பொம்மல் ஓதி! நம்மொடு ஒராங்குச் செலவு அயர்ந்தனரால் இன்றே - மலைதொறும் மால் கழை பிசைந்த கால் வாய் கூர் எரி, மீன் கொள் பரதவர் கொடுந் திமில் நளி சுடர் வான் தோய் புணரிமிசைக் கண்டாங்கு, மேவரத் தோன்றும் யாஅ உயர் நனந்தலை உயவல் யானை வெளிநுச் சென்றன்ன கல் ஊர்பு இழிதரும் புல் சாய் சிறு நெறி, காடு மீக்கூறும் கோடு ஏந்து ஒருத்தல் ஆறு கடிகொள்ளும் அருஞ் சுரம், பணைத் தோள் நாறு ஐங் கூந்தல், கொம்மை வரி முலை நிரை இதழ் உண்கண், மகளிர்க்கு அரியவால் என அழுங்கிய செலவே! - மாமூலனார் அக 65