பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை த. கோவேந்தன் : 241

பிணித்த கேடயம் ஏந்திய காலாட்படையை அணி வகுத்து நிறுத்தினாற் போன்ற தோற்றம் உடையவை போரில் இறந்த வர் வீரர் உடல்களைத் தழையால் மூடிக் கற்களைக் கொண்டு குவித்து வைத்த பதுக்கைகள் நிறைந்திருக்கும் அத்தகைய பாலைப் பரப்பிலே, வடிவம் இல்லாத பேயின் பெயரை அடை மொழியாய்க் கொண்ட, ஏறி ஊர்தற்கு இயலாத தேர் - கானல் நீரான பெர்ய்த்தேர் பரந்திருத்தலால் விளங்கும் பருக்கைக் கற்கள் பற்பல ஒருசேர நிலத்திலே வீழ்ந்த மின்மினிப் பூச்சி களைப் போல் விளங்கும் என அறிந்தவர் உரைப்பர்

இங்ங்னம் அறிந்தவர் கூறக் கேட்ட நான் என்செய்வேன் இத்தகைய கொடிய வழியில் சென்ற நம் தலைவர் என்ன ஆயினாரோ? என எண்ணி வருந்துகின்றேன்" என்று தலைவன் பொருள் வழிப் பிரிந்த வழி தோழிக்குத் தலைவி கூறினாள் r 331. விரைவில் வருவார் தலைவர் ஆய்நலம் தொலைந்த மேனியும், மா மலர்த் தகை வனப்பு இழந்த கண்ணும், வகை இல வண்ணம் வாடிய வரியும், நோக்கி ஆழல் ஆன்றிசின் நீயே. உரிதினின் ஈதல் இன்பம் வெஃகி, மேவரச் செய் பொருள் திறவர் ஆகி, புல் இலைப் பராரை நெல்லி அம் புளித் திரள் காய் கான மட மரைக் கணநிரை கவரும் வேனில் அத்தம் என்னாது, ஏமுற்று, விண் பொரு நெடுங் குடை இயல் தேர் மோரியர் பொன் புனை திகிரி,திரிதரக் குறைத்த அறை இறந்து அகன்றனர் ஆயினும், எனையது உம் நீடலர் - வாழி, தோழி - ஆடு இயல் மட மயில் ஒழித்த பீலி வார்ந்து, தம் சிலை மாண் வல் வில் சுற்றிப், பல மாண் அம்புடைக் கையர் அரண் பல நூறி நன்கலம் தரூஉம் வயவர் பெருமகன் சுடர் மணிப் பெரும் பூண் ஆஅய் கானத்துத்