பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

தலை நாள் அலரின் நாறும் நின் அலர் முலை ஆகத்து இன் துயில் மறந்தே.

- உமட்டுர்கிழார் மகனார் பரங்கொற்றனார் அக 69 "தோழி வாழ்க ஆராயும் அழகு தொலைந்த மேனி யையும், கரிய மலரின் சிறந்த அழகினை இழந்துவிட்ட கண்ணையும் முந்தைய இயல்புடன் இல்லாது அழகு வாடிய திதலையையும் நோக்கி வருந்துதல் வேண்டா நம் தலைவர் ஈவதால் உண்டாகும் இன்பம் தமக்கு உரிமையாக வேண்டும் என விரும்பி, அத்தன்மை வந்தடைவதற்காகப் பொருள் ஈட்டும் திறத்தில் முயல்பவராகிச் சென்றார் சிறிய இலையை யும் பருத்த அடியையும் உடைய நெல்லியின் புளிப்பை யுடைய காயினைக் காட்டில் இளைய காட்டுமானின் கூட்டம் தின்கின்ற வெப்பம் மிக்க வழி என்றும் பாராமல், துன்பத்தை இன்பமாகக் கொண்டு, வானத்தைத் தொடும் பெரிய மலையிடத்து இயங்குகின்ற தேரையுடைய மோரிய மன்னர், பொன்னால் இயன்ற உருள் தடையில்லாமல் செல்வதற்காகச் செதுக்கிய பாறைக் கற்களையுடைய மலை வழியைக் கடந்து அப்பாற்பட்ட நாட்டுக்குச் சென்றார்

ஆயினும், ஆடும் தன்மையுடைய இளைய மயில் உதிர்த்த தோகையை இரண்டாக் கிழித்துத் தம் ஒலிமாட்சியுடைய வலிய வில்லில் சுற்றிப் பல்வேறு வகைப்பட்ட மாட்சியுடைய அம்புகளைக் கைக்கொண்டு சென்று, பகைவரின் பல அரண் களையும் அழித்து, அம் மன்னர் தரும் அணிகலன்களைக் கொணர்ந்து தருகின்ற வன்மைமிக்க மறவர்களின் தலைவ னான ஒளியுடைய பெரிய அணிகளை அணிந்த ஆய்’ என்ற வள்ளலின் காட்டில், அன்றலர்ந்த மலர் போல் மணக்கும் நின் அடிப்பகுதி பரந்த முலையையுடைய மார்பில் துயிலும் இனிய உறக்கத்தை மறந்து சிறிதும் காலம் தாழ்த்தி இரார் விரை வில் வருவார்” என்று பொருள் வயின் பிரிந்த தலைவன் காலம் நீட்டிக்க வருவர் எனத் தலைவிக்குத் தோழி ஆற்றுவித்தாள் 332. என் உயிர் நீங்கும் காலம் போலும்

நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு, குறைந்தோர் பயன் இன்மையின் பற்று விட்டு, ஒரூஉம்