பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை த. கோவேந்தன் : 243

நயன் இல் மாக்கள் போல, வண்டினம் சுனைப் பூ நீத்து, சினைப் பூப் படர, மை இல் மான் இனம் மருள, பையென வெந்து ஆறு பொன்னின் அந்தி பூப்ப, ஐயறிவு அகற்றும் கையறு படரோடு அகல் இரு வானம் அம் மஞ்சு ஈனப், பகல் ஆற்றுப்படுத்த பழங்கண் மாலை காதலர்ப் பிரிந்த புலம்பின் நோதக ஆர் அஞர் உறுநர் அரு நிறம் சுட்டிக் கூர் எஃகு எறிஞரின் அலைத்தல் ஆனாது எள் அற இயற்றிய நிழல் காண் மண்டிலத்து உள் ஊது ஆவியின் பைப்பய நுணுகி, மதுகை மாய்தல் வேண்டும் - பெரிது அழிந்து, இது கொல் - வாழி, தோழி! என் உயிர் விலங்கு வெங் கடு வளி எடுப்பத் துளங்கு மரப் புள்ளின் துறக்கும் பொழுதே?

- அந்தியிளங்கீரனார் அக 71 "தோழியே, வாழி தாம் முன்பு நட்புச் செய்தவர் செல்வம் குறைந்து வறியவர் ஆனமையின் அவரால் தமக்குப் பயன் இல்லாததைக் கண்டு, அவரிடம் தாம் கொண்ட அன்பைத் துறந்து தங்கட்குப் பயன்படத் தக்க செல்வரை ஆராய்ந்து கண்டு நட்புக் கொள்ளும் எண்ணத்துடன் கைவிட்டுப் போவர் மக்கள் அல்லாத கயமை மாக்கள் அவர் போன்று வண்டுக் கூட்டம் சுனையில் மலர்ந்துள்ள பூக்களைத் துறந்து கோட்டு மலர்களை விரும்பிச் செல்லும்; குற்றம் இல்லாத மான் கூட்டம் மயங்கும்; உலையில் வெந்து ஆறிய பொன் போன்ற நிறம் உடைய செவ்வந்தி அரும்புகள் மலரும்; வியக்கத் தக்க நல்லறிவையும் போக்கி விடுவற்குக் காரணமான செயலற்ற துன்பத்துடன் பெரிய வானமானது முகில்களைத் தரும் இத்தகைய ஞாயிறு மறைந்த மாலைக் காலம்

“முன்னமே காதலரைப் பிரிந்த தனிமையால் வருந்தி இருக்கவும், மிக்க துன்பத்தை அடைந்திருப்பவர் ஒருவரது அரிய மார்பைக் குறித்துக் கூர்மையான வேலை எறிவார்