பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

போல் வருந்துவதை ஒழியாததாயிற்று குற்றம் இல்லாமல் இயற்றப்பட்ட உருவம் பார்க்கும் கண்ணாடியின் உள்ளே, ஊதிய ஆவி முன் பரந்து பின் சுருங்கும், அது போன்று சிறிது சிறிதாகக் குறைந்து வந்து என் வலிமை மாய்வது ஆயிற்று

“மிகக் கடிய சூறாவளிக் காற்று வீச, அசையும் மரத்தில் உள்ள பறவை போன்று மிகவும் அழிந்து எனது உடலைத் துறந்து போகும் காலம் இதுவே போலும்” என்று பொருள் வயின் பிரிந்த தலைவனின் பிரிவாற்றாது வருந்திய தலை விக்குத் தோழி உரைத்தாள்

333. வருவாய் தலைவர் வருவதைக் காண

பின்னொடு முடித்த மண்ணா முச்சி நெய் கனி வீழ் குழல் அகப்படத் தைஇ, வெருகு இருள் நோக்கியன்ன கதிர் விடுபு ஒரு காழ் முத்தம் இடைமுலை விளங்க, வணங்குறு கற்பொடு மடம் கொளச் சாஅய், நின் நோய்த் தலையையும் அல்லை; தெறுவர 'என் ஆகுவள்கொல், அளியள்தான்? என, என் அழிபு இரங்கும் நின்னொடு யானும் ஆறு அன்று என்னா வேறு அல் காட்சி இருவேம் நம் படர் தீர வருவது காணிய வம்மோ - காதல்அம் தோழி! கொடி பிணங்கு அளில இருள் கொள் நாகம் மடி பதம் பார்க்கும், வயமான் துப்பின் ஏனல்அம் சிறுதினைச் சேணோன் கையதைப் பிடிக் கை அமைந்த கனல் வாய்க் கொள்ளி விடு பொறிச் சுடரின் மின்னி, அவர் சென்ற தேனத்து நின்றதால் மழையே

- எருமை வெளியனார் அக 73 “காதலை உடைய தோழியே, நம் தலைவர் சென்ற நாட்டில், கொடிகள் பின்னிய சிறு காட்டில் இருண்ட நிறமுடைய யானையின் தளர்ச்சி அடையும் நேரத்தைப் பார்த்துக் காத்திருக்கும் ஆண் சிங்கத்தின் வன்மை வாய்ந்த