பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை த. கோவேந்தன் : 245

வன்; தினையின் வகையுள் ஒன்றான சிறு தினையைக் காக்கும் பரண் மீதுள்ளவன்; அவனது கையில் உள்ளதும், கையில் பொருந்தியதும் தீயை உடையதுமான கொள்ளிக் கோல் வீசும்போது வெளிப்படும் சுடர்ப் பொறிகளைப் போல் மின்னி மழை பெய்தது

ஆதலால் பின்னப்பட்ட அளவிலே முடிக்கப்பட்ட வேறு அலங்காரம் ஏதும் செய்யப்படாத கொண்டையில் நெய் பூசப்பட்ட கூந்தலை ஒரு சேரக் கட்டிக் காட்டுப் பூனை இருளில் விழித்து நோக்கியதைப் போல் ஒரு முத்துமாலை ஒளிவிட்டு முலையிலே விளங்க, அருந்ததி போன்ற கற்பால் மடம் மிக, மெலிவடைந்து நீ அடையும் நோயினால் மட்டும் வருந்திடவில்லை. எனது நிலை நோக்கி உனக்கு அச்சம் வருதலால், 'நம்மால் இரங்கத் தக்க இவள், நம் பெரு மானின் பிரிவாற்றாமையால் என் ஆகுவாளோ, அறியேன் என்று என் வருத்தத்திற்கும் வருந்துகின்றாய் அங்ங்னம் நெறியன்று என எண்ணாத வேற்றுமையில்லாத அறிவை உடைய நம் இருவரின் வருத்தமும் நீங்க, நம் தலைவர் வருதலைக் காண வருவாயாக!” என்று பொருள் வயின் பிரிந்த தலைவன் மீள்வதைக் கண்டு தலைவியிடம் தோழி கூறினாள்

334. அழிந்த அழகைத் தருவார் உண்டோ? அருள் அன்று ஆக, ஆள்வினை, ஆடவர் பொருள்” என வலித்த பொருள் அல் காட்சியின் மைந்து மலி உள்ளமொடு துஞ்சல் செல்லாது, எரி சினம் தவழ்ந்த இருங் கடற்று அடைமுதல் கரி குதிர் மரத்த கான வாழ்க்கை, அடு புலி முன்பின், தொடு கழல் மறவர் தொன்று இயல் சிறுகுடி மன்று நிழற் படுக்கும் அண்ணல் நெடு வரை, ஆம் அறப் புலர்ந்த கல் நெறிப் படர்குவர் ஆயின் - நல் நுதல் செயிர் தீர் கொள்கை, சில் மொழி, துவர் வாய், அவிர் தொடி முன்கை, ஆய்இழை மகளிர் ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து, ஆராக் காதலொடு தாரிடைக் குழையாது

á &