பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

சென்று படு விறற் கவின் உள்ளி, என்றும் இரங்குநர் அல்லது, பெயர்தந்து, யாவரும் தருநரும் உளரோ, இல் உலகத்தான்? என - மாரி ஈங்கை மாத் தளிர் அன்ன அம் மா மேனி, ஐது அமை நுசுப்பின், பல் காசு நிரைத்த, கோடு ஏந்து, அல்குல்; மெல் இயல் குறுமகள்! - புலந்து பல கூறி ஆனா நோயை ஆக, யானே பிரியச் சூழ்தலும் உண்டோ அரிது பெறு சிறப்பின் நின்வயினானோ?

- மதுரைப் போத்தனார் அக 75 “மழைக் காலத்தில் விளங்கும் இண்டைக் கொடியினது கருமையான தளிரைப் போன்ற அழகிய மாமை நிறத்தை உடைய மேனியையும், நுட்பமாய் விளங்கும் இடையையும் பல பொன் காசுகளையும் வரிசையாய்க் கோக்கப்பட்ட மேகலை அணிந்த பக்கம் உயர்ந்த அல்குலையும் உடைய மென்மையான சாயலையுடைய குறு மகளே, நான் சொல் வதைக் கேட்பாயாக:

ஆடவர் அருளே உறுதிப் பொருளாய் விளங்க அதனைப் பொருள் அன்று ஆகிவிடும்படிக் கைவிட்டு, முயற்சியே உறுதிப் பொருள் ஆகும் எனத் துணிவதற்குக் காரணமான உண்மையற்ற அறிவினை உடைய வலிமை மிக்க உள்ளத்தால் மடிந்து இராது எரிகின்ற தீத்தழல் பரவிய பெருங்காட்டில் புகுமிடத்தில் இலைகள் முதலியன கரிந்து உதிரப் பெற்ற மரங்களை உடைய காட்டில் வாழும் வாழ்க்கையை உடைய கொல்லும் புலியைப் போன்ற வலிமையை உடைய கட்டப்பெற்ற கழலையுடைய மறவர்கள் பழைமையுடைய தம் சிறிய ஊரில் உள்ள மன்றத் தின் நிழலில் உறங்கும் பெருமையுடைய பெரிய மலையில் உள்ள நீர் இல்லாமல் உலர்ந்த வழியில் செல்வர்

அவ்வாறு செல்வாரானால், நல்ல நெற்றியையும் குற்றம் இல்லாத கொள்கையையும், சில சொற்களையும், பவளம் போன்ற வாயையும், விளங்கும் வளையல் அணியப் பெற்ற கையையும், ஆராய்ந்து எடுக்கப்பட்ட அணிகளையும் உடைய பெண்களின் முத்து மாலை சூடப்பெற்ற பரந்த முலையை