பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை த. கோவேந்தன் : 247

யுடைய மார்பில் மிக்க விருப்பத்துடன் கணவரும் புணரும் போது அக் கணவரின் மார்பில் அணிந்த மலர் மாலை புணர்ச்சியில் அகப்பட்டுக் குழைந்திடாமலேயே அம் மகளிட மிருந்து அகன்று போகும் மிக்க அழகினை எண்ணி எண்ணி இரங்குவர் அங்ங்னம் இரக்கம் கொள்வாரே அல்லாமல் எவரேனும் அந்த அழகை மீட்டுக் கொணர்ந்து கொடுப்பவர் இவ் உலகத்தில் உண்டோ? என்று இப்படிப் பல சொற் களையும் வெறுத்துச் சொல்லித் துன்பத்தை உடையவளாய் உள்ளாய். இங்கனமாக, நான் அரிதாகப் பெற்ற சிறப்பைக் கொண்ட உன்னிடமிருந்து பிரிய நான் எண்ணுவதும் உண்டோ?” என்று பொருள் வயின் பிரிவர் என்று வேறு பட்ட தலைவிக்குப் பிரியார் என்று தோழி சொன்னாள்

335. செஞ்சே பிரிந்து செல்லவதைக் கைவிடு 'நல் நுதல் பசப்பவும், ஆள்வினை தரீஇயர், துன் அருங் கானம் துன்னுதல் நன்று எனப் பின்னின்று சூழ்ந்தனை.ஆயின், நன்று இன்னாச் சூழ்ந்திசின் - வாழிய, நெஞ்சே! - வெய்துற இடி உமிழ் வானம் நீங்கி, யாங்கனும் குடி பதிப்பெயர்ந்த கட்டுடை முது பாழ், கயிறு பிணிக் குழிசி ஒலை கொண்மார் பொறி கண்டு அழிக்கும் ஆவண மாக்களின் உயிர் திறம் பெயர, நல் அமர்க் கடந்த தறுகணாளர் குடர் தரீஇ.தெறுவர, செஞ் செவி எருவை, அஞ்க்வர இகுக்கும் கல் அதர்க் கவலை போகின், சீறுர்ப் புல் அரை இத்திப் புகர் படு நீழல் எல் வளி அலைக்கும், இருள் கூர் மாலை, வானவள் மறவன், வணங்குவில் தடக் கை, ஆனா நறவின் வண் மகிழ், பிட்டன் பொருந்தா மன்னர் அருஞ் சமத்து உயர்த்த திருந்துஇலை எஃகம் போல

அருந் துயர் தரும், இவள் பனி வார் கண்ணே.

- மருதனிளநாகனார் அக 77