பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை த. கோவேந்தன் : 249

336. நெஞ்சே, என்னை நின் பேதைமை தோட் பதன் அமைத்த கருங் கை ஆடவர் கனை பொறி பிறப்ப நூறி, வினைப் படர்ந்து, கல்லுறுத்து இயற்றிய வல் உவர்ப் படுவில், பார் உடை மருங்கின் ஊறல் மண்டிய வன் புலம் துமியப் போகி, கொங்கர் படு மணி ஆயம் நீர்க்கு நிமிர்ந்து செல்லும் சேதா எடுத்த செந் நிலக் குரூஉத் துகள் அகல் இரு விசும்பின் ஊன்றித் தோன்றும் நனந்தலை அழுவம், நம்மொடு துணைப்ப, 'வல்லாங்கு வருதும் என்னாது, அல்குவர வருந்தினை - வாழி, என் நெஞ்சே - இருஞ் சிறை வளை வாய்ப் பருந்தின் வான் கட் பேடை ஆடுதொறு கனையும் அவ் வாய்க் கடுந் துடிக் கொடு வில் எயினர் கோட் சுரம் படர நெடு விளி பயிற்றும் நிரம்பா நீள் இடை கல் பிறங்கு அத்தம் போகி நில்லாப் பொருட் பிணிப் பிரிந்த நீயே.

- குடவாயிற் கீரத்தனார் அக 79 என் நெஞ்சே வாழ்க அசைந்து நடக்குந்தோறும் ஒலிக்கும் அழகிய வாயினை உடைய கடிய துடியையும் வளைந்த வில்லை யும் உடைய மறவர் பகைவரை வளைத்துக் கொள்ளும் சுரத்தில் செல்ல, பெரிய இறகையும் வளைந்த வாயையும் உடைய பருந் தின் வெண்மையான கண்ணை யுடைய பெட்டைப் பருந்து, தன் துணையை நோக்கி நீண்ட கூப்பீடு செய்யும், நீண்ட இடமான கற்கள் விளங்கும் காட்டில் நடந்து எவ் இடத்தும் நிலைத்து நில்லாத பொருள் மீது உள்ள பற்றால் பிரிந்தாய்

இத்தகைய நீ தோளில் தொங்கும்படி விடும் கட்டுச் சோற்றை உடைய வலிய கையை உடைய ஆடவர், கிணறு வெட்டும் தொழிலில் புகுந்து மிக்க தீப்பொறி பறக்கப் பாறைகளை வெட்டித் தோண்டி அமைப்பர் மிக்க உவர்ப்புத் தன்மையுடைய அக் கிணற்றில் மண் உள்ள பக்கத்தில் ஊறிய நீரைக் குடிப்பதற்காகக் கொங்கரின் ஒலிக்கும் மணி பூண்ட ஆயமான செவ்விய பசுக்கள் வலிய நிலங்கள் துகளாகுமாறு