பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : 251

கிளைகளையுடைய இருப்பை மரத்தின் இனிய கனிகளைத் தின்று வெறுத்தால் பல கிளைகளாய கறையான் தன் நனைந்த வாயினால் ஒருங்கு கூடி வருந்திக் கட்டிய புல்லிய வளைகளையுடைய புற்றின் நெடிய உச்சியை இரும்பு உலையில் ஊதும் துருத்தியைப் போல் உயிர்த்துப் பெயர்த்து, புற்றாஞ் சோறாம் இரையைத் தேடியுண்ணும் இத்தகைய இயல்புடைய மண் பிளவுபட்ட வறண்ட பாலை நிலம்

அங்கு வெயில் கண்களைப் பார்க்க இயலாதபடி ஞாயிறு காய்தலால் நெறியின் பக்கத்தில் உள்ள வெண் கடப்ப மரங்களின் இலைகள் வாட்டம் அடைந்து கவிழ்ந்துள்ள உச்சியை உடைய கிளைகளில் ஏறி இரையைப் பாய்ந் தெடுக்கும் பருந்தானது தனிமை அடைந்து வருந்தும் இத் தகைய வெப்பம் மிக்க நீண்ட இடங்களான கொடிய முனைகளையுடைய அரிய சுரத்தினைத் தாண்டி எம் பெரு மாட்டியைப் பிரிந்து பொருள் ஈட்டச் செல்வீரோ” என்று பிரிவுணர்த்திய தலைவனுக்குத் தலைவியின் குறிப்பறிந்து கூறினாள் தோழி

338. தலைவியின் குணங்கள் வந்தன வலம் சுரி மராஅத்துச் சுரம் கமழ் புது வீச் கரி ஆர் உளைத் தலை பொலியச் சூடிக் கறை அடி மடப் பிடி கானத்து அலற, களிற்றுக் கன்று ஒழித்த உவகையர், கலி சிறந்து, கருங் கால் மராஅத்துக் கொழுங் கொம்பு பிளந்து, பெரும் பொளி வெண் நார் அழுந்துபடப் பூட்டி நெடுங் கொடி நுடங்கும் நியம மூதூர், நறவு நொடை நல் இல் புதவுமுற் பிணிக்கும் கல்லா இளையர் பெருமகன் புல்லி வியன் தலை நல் நாட்டு வேங்கடம் கழியினும், சேயர் என்னாது, அன்பு மிகக் கடைஇ, எய்த வந்தனவால் தாமே - நெய்தல் கூம்பு விடு நிகர் மலர் அன்ன ஏந்து எழில் மழைக் கண் எம் காதலி குணனே.

- கல்லாடனார் அக 83