பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

குழறும் இடம் சிறிய இலையை யுடைய வேல மரத்தில் முறையாய் முற்றி விளைந்த நெற்று உதிரச் சிள்வீடு என்னும் வண்டுகள் ஒலிக்கும் ஆரவாரம் மிக்க பரப்பைக் கொண்ட தும் வண்ணார் எடுக்கும் உவர் மண் ஒழியக் களர்மண் பந்து உள்ளதுமான கற்களை இடையே கொண்ட நீண்ட இடம்

நிணமான ஊனைத் தின்ற விசை கொண்ட வில்லை யுடைய மறவர்கள், கருமை பொருந்திய வலிய தோள்கள் பூரிக்கச் சுமை மிக்க கழுதைகளின் நீண்ட நிரைகளைப் பின்பற்றி வரும் செப்பமுடைய வாளைக் கொண்ட வீரர் களான வாணிகளர்களை வெட்டி, அவர்களின் தலைகளைத் துண்டித்து மிகுந்த புலால் நாற்றம் வீசும் போர்க் களத்தில் தம் வெற்றிக்கு அறிகுறியாய் மெல்லத் துடியை முழக்கி, அரிய அணிகளைத் திறையாகப் பெற்றுக் குவித்த போர் விருப்பத்தை யுடைய மறவர்கள், விற்கள் பொருந்திய அரண் களில் அவரவர் கொள்ள வேண்டிய முறையில் பிரித்துத் தருவது இத்தகைய வறிய குறுங்காட்டையும் தினைப் புனங் களையும் உடைய வழிகள் இவை நீண்டவை என எண்ணா மல், தன் மென்மையான சிவந்த அடிகள் வருந்த, அவனுடன் நடந்து செல்லற்கு வல்லமையுடையவளோ” என்று மகட் போக்கிய செவிலித்தாய் சொன்னாள்

342. விரைவில் வருவார் தலைவர்

விளங்குபகல் உதவிய பல் கதிர் ஞாயிறு வளம் கெழு மா மலை பயம் கெடத் தெறுதலின், அருவி ஆன்ற பெரு வரை மருங்கில் சூர்ச் சுனை தழைஇ நீர்ப்பயம் காணாது, பாசி தின்ற பைங் கண் யானை ஒய் பசிப் பிடியொடு ஒருதிறன் ஒடுங்க, வேய் கண் உடைந்த வெயில் அவிர் நனந்தலை அரும் பொருள் வேட்கையின் அகன்றனர் ஆயினும், பெரும் பேர் அன்பினர் - தோழி! - இருங் கேழ் இரலை சேக்கும், பரல் உயர் பதுக்கைக் கடுங்கண் மழவர் களவு உழவு எழுந்த நெடுங் கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர்,