பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை த. கோவேந்தன் : 257

விசிபிணி முழவின் குட்டுவன் காப்பப் பசி என அறியாப் பனை பயில் இருக்கை, தட மருப்பு எருமை தாமரை முனையின், முடம் முதிர் பலவின் கொழு நிழல் வதியும், குடநாடு பெறினும் தவிரலர் - மடமான் நோக்கி நின் மாண் நலம் மறந்தே.

- மாமூலனார் அக 91 "தோழியே உலகம் ஒளியுடன் விளங்குவதற்குக் காரண மான பகலைத் தந்த பல கதிர்களையுடைய ஞாயிறு, வளம் வாய்ந்த பெரிய மலை பயன் கெடும்படி காய்ந்தது அதனால் பசிய கண்களையுடைய யானை, அருவிகள் நீர் இல்லாது ஒழிந்த பக்கமலையில் தீண்டி வருத்தும் தெய்வங்களையுடைய சுனைகளில் இறங்கிக் கையால் துழவிப் பார்த்தும் பயன் காணாமையால் அங்கு உலர்ந்துள்ள பாசியைத் தின்னும் அது தன் இயக்கம் ஒய்ந்து போதற்குக் காரணமான பசியுடன் தன் பெண் யானையுடன் ஒரு பக்கத்தே ஒடுங்கிக் கிடக்கும் அங்கு மூங்கில்களின் கணுக்கள் உடையுமாறு காய்கின்ற வெயில் விளங்கும் இத்தகைய அகன்ற பாலை நிலத்தில் தலைவர் நம்மைப் பிரிந்து சென்றார் ஆயினும் அவர் நம்மிடம் பேரன்புடையவர் அல்லரோ?

ஆதலால், கரிய நிறம் உடைய இரலை மான்கள் உறங்கும் பரற் கற்களால் உயர்ந்த கற்குவியலில் அஞ்சாமை உடைய மழ நாட்டினர், பசுக்களைக் களவு செய்பவர்க்கு உதவியாய் வளர்ந்த நீண்ட அடியை உடைய ஆசினிப் பலவின் மரங் களையுடையது, ஒடுங்காடு என்னும் ஊர் அதற்கு அப்பால் இறுக்கமாகப் பிணித்த முழவை உடைய குட்டுவன் காத்த லால் பசி என்பதை அறியாத மருதவளம் மிக்க ஊர்களை யுடையது வளைந்த கொம்பை உடைய எருமை தான் மேய்ந்த தாமரையை வெறுக்குமானால் வளைந்த தன்மையுடைய பலாவின் கொழுவிய நிழலில் தங்குதற்கு இடமானது குட நாடு அதனையே பெறுவதானாலும், இளமையுடைய மான் போலும் பார்வையை உடையவளே, உன் மாட்சிமையுடைய அழகை மறந்து அங்குத் தங்க மாட்டார் எனத் தோழி தலைவியை நோக்கிக் கூறி அவளை ஆற்றுவித்தாள்