பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 * அன்பொடு. புணர்ந்த ஐந்தினை - பாலை

தலைவி தன் தோழியை நோக்கி, “தோழியே, கேள். அரத்தத்தைப் போல் சிவந்த செவியையுடைய கழுகுகள் கற்களின் பக்கத்தில் கிடக்கும் மிக்க புலால் நாற்றத்தை யுடைய ஊன் துண்டுகளைப் பார்க்கும் காடுகள் மிக்க அச்சம் பொருந்தினவாம் என்று நம்மிடம் உரைப்பர் ஆதலால் விரைய வராது காலம் தாழ்த்து வரக்கூடியவராய் நம் காதலர் சென்ற வழிகள் அக் காடுகளிடம் உள்ளன ஆதலால் நான் வருந்துவேன்” என்று உரைத்தாள்.

36. தலைவர் செயலைப் பார்த்தாயா? அம்ம வாழி, தோழி! நம்வயின் பிரியலர் போலப் புணர்ந்தோர்மன்ற - நின்றதில் பொருட்பிணி முற்றிய வென்றுழ் நீடிய சுரன் இறந்தோரே. - ஐங் 336 தலைவி, “தோழியே! கேள். நிலைபேறில்லாத பொருள் தேடப் பிரிந்து செய்யும் வினையை முடித்தற்கு வெயில் கருகிச் சுடும் காட்டைக் கடந்து போன நம் தலைவர், பண்டு நம்மைக் கூடியபோது பிரியாதவர் போல் கூடி மகிழ்ந்தார்: அவர் செயல் இருந்தவாறு என்னே!” என்றான்.

37. தழுவலினும் பொருன் இனியதோ? அம்ம வாழி, தோழி! நம்வயின் மெய் உற விரும்பிய கை கவர் முயக்கினும் இனியமன்ற தாமே - பனி இருங் குன்றம் சென்றோர்க்குப் பொருளே! - ஜங் 337 தலைவி, “தோழியே! கேள். குளிர்ச்சியுடைய பெரிய குன்றத்தைக் கடந்து பொருள் தேடப் பிரிந்த நம் காதலர்க்கு அப் பொருள்கள் நம்மிடம் மெய்யுற விரும்பிக் கையால் சேர முயங்கும் முயக்கத்தை விட இன்பம் மிக அளிப்பன வாகும். இல்லையேல், பிரிவாரா அவர்?’ என்று தோழியை நோக்கிச் சொன்னாள்.

38. கூடாத காலத்தில் தலைவர் பிரிந்தார்!

அம்ம வாழி, தோழி சாரல் இலை இல மலர்ந்த ஒங்கு நிலை இலவம்