பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை த. கோவேந்தன் : 259

பகைவரின் அரண்கள் பலவற்றையும் வென்ற வன்மை வாய்ந்த படைகளையுடைய வாடாத வேம்பு மாலையை அணிந்தவன் பாண்டியன் அவனது மதுரையில் உள்ள நாளங்காடியைப் போன்ற நறுமணம் கமழும் நறிய நெற்றியை யும் நீண்ட கூந்தலையும் உடைய மாம நிறத்தை உடையவள் நம் தலைவி

அவளுடன், மலையைக் குடைந்து செய்தாற் போன்ற வானை அளாவிய நீண்ட நம் இல்லத்தில், எண்ணெயின் துரையை முகந்து இட்டாற் போன்ற மென்மையான மலர்களால் ஆன படுக்கையையுடைய நீண்ட சுடரையுடைய விளக்கின் ஒளியில் நன்மையுடைய நம் மார்பில் தலைவியின் மார்பின் பூண்கள் வடுக்களை உண்டாக்கும்படியாய், வரி பொருந்திய நெற்றியையும் வாயில் புகும் மதநீரையும் வலிமை விளங்கும் மறத்தன்மை ஆற்றலுடன் பகைவர் படையை அணுகி ஆளைப் பற்றி நிலத்தில் அறைந்து கொல்லும் தொழிலில் தவறாத அச்சம் வருதற்குக் காரணமான ஆண் யானையையும், பெரிய தேரினையும் உடைய சேரனின் செல்வம் மிக்க அகன்ற தலைநகரமான கருவூரில், தெளிந்த நீரையுடைய குளிர்ந்த ஆன் பொருநை ஆற்றின் உயர்ந்த கரையில் உள்ள மணலை விடப் பலமுறை தழுவிக் கொள் வோம்; எனவே, நெஞ்சே வருந்தாது என்னுடன் வருவாயாக' என்று வினைமுற்றித் திரும்பும் தலைவன் தன் நெஞ்சிடம் கூறினான்

344. உடன் போக்குக்கு இசைந்த காரணம்

பைபயப் பசந்தன்று நுதலும், சாஅய் ஐது ஆகின்று, என் தளிர் புரை மேனியும்; பலரும் அறியத் திகழ்தரும், அவலமும் உயிர் கொடு கழியின் அல்லதை, நினையின் எவனோ? - வாழி, தோழி! - பொரிகால் பொகுட்டு அரை இருப்பைக் குவிகுலைக் கழன்ற ஆலி ஒப்பின் தூம்புடைத் திரள் வி ஆறு செல் வம்பலர் நீள் இடை அழுங்க, ஈனல் எண்கின் இருங் கிளை கவரும்