பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை வகை - உரை : த. கோவேந்தன் : 261

கொலை வில் ஆடவர் போலப் பலவுடன் பெருந் தலை எருவையொடு பருந்து வந்து இறுக்கும் அருஞ் சுரம் இறந்த கொடியோர்க்கு அல்கலும் இருங் கழை இறும்பின் ஆய்ந்துகொண்டு அறுத்த நுணங்கு கண் சிறு கோல் வணங்குஇறை மகளிரொடு அகவுநர்ப் பரந்த அன்பின், கழல் தொடி, நறவு மகிழ் இருக்கை, நன்னன் வேண்மான் வயலை வேலி வியலூர் அன்ன, நின் அலர்முலை ஆகம் புலம்ப, பல நினைந்து, ஆழல் என்றி - தோழி: யாழ என் கண் பணி நிறுத்தல் எளிதோ - குரவு மலர்ந்து அற்சிரம் நீங்கிய அரும் பத வேனில் அறல் அவிர் வார் மணல் அகல்யாற்று அடைகரை, துறை அணி மருதமொடு இகல் கொள ஓங்கி, கலிழ் தளிர் அணிந்த இருஞ் சினை மா அத்து இணர் ததை புதுப் பூ நிரைத்த பொங்கர் புகை புரை அம் மஞ்சு ஊர, நுகர் குயில் அகவும் குரல் கேட்போர்க்கே?

- மாமூலனார் அக 97 “தோழியே, நான் ஆற்றியிருக்க வேண்டும் எனக் கூறுபவளே கேட்பாயாக கள்ளிக் காட்டில் உள்ள புள்ளி யாகிய பொறி பொருந்திய கலைமானை, வறண்ட அழகிய கொம்பு தெறித்து விழுமாறு ஒடுகின்ற அதன் வெற்றியையும் கடந்து பிடித்துத் தின்ற புலால் விருப்பையுடைய புலி அது கைவிட்டுப் போன மூட்டுவாய் கழிந்து மிக்க முடை நாற்றத்தையுடைய தசை உள்ள இடம் அது அந்த இடத்தில் இரவில் காட்டரண்களில் உள்ளவர் அலறுமாறு அவர் களைக் கொன்று தாம் கவர்ந்து வந்து நிரைகளைப் பகுத்துக் கொண்டு பெரிய கற்பாறையினது முடுக்கிலே தசையை அறுத்துத் தின்பர், கொலைத் தொழிலில் வல்ல வலிய வில்லினையுடைய வெட்சி வீரர். அவர் போல, பெரிய தலையையுடைய கழுகுகளுடன் பருந்துகள் பலவும் ஒருங்கு வந்து சூழ்ந்துள்ள அரிய சுர நெறியைக் கடந்து போனார் கொடியவரான நம் தலைவர்.