பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

வாய்ப் பகை கடியும் மண்ணொடு கடுந் திறல் தீப் படு சிறு கோல் வில்லொடு பற்றி, நுரை தெரி மத்தம் கொளிஇ, நிரைப் புறத்து அடி புதை தொடுதோல் பறைய ஏகி கடி புலம் கவர்ந்த கன்றுடக் கொள்ளையர், இனம் தலைபெயர்க்கும் நனந்தலைப் பெருங் காட்டு, அகல் இரு விசும்பிற்கு ஒடம் போல, பகலிடை நின்ற பல் கதிர் ஞாயிற்று உருப்பு அவிர்பு உளரிய கழன்று வரு கோடை, புன் கால் முருங்கை ஊழ் கலி பல் மலர், தண் கார் ஆலியின், தாவன உதிரும் பணி படு பல் மலை இறந்தோர்க்கு முனிதகு பண்பு யாம் செய்தன்றோ இலமே!

- மாமூலனார் அக 101 "தோழியே, நான் சொல்வதைக் கேட்பாயாக இம்மையில் நன்மை செய்தால் தீமை உண்டாவதில்லை எனக் கூறப்படும் தொன்று தொட்டு வழங்கும் பழமொழி இன்று பொய்யாகி விட்டதோ!

செம்மறியாட்டுக் கிடாயின் கொம்பினைப் போன்ற சுற்றிக் கடை குழன்ற பிடரியை மறைக்கும் தலைமயிரையும் சிவந்த கண்ணையும் உடையவர் மழவர் அவர்கள் வாயி னின்று உண்டாகும் இருமலான பகையை எழாமல் தீர்க்கும் மருந்தான புற்று மண்ணை வாயில் அடக்கிக் கொண்டு, கடிய திறல் பொருந்திய தீ உண்டாகும் அம்பை வில்லுடன் கையில் கொண்டு, வெண்ணெயை வெளிப்படுத்தும் மத்தைக் கவர்ந்து கொண்டு, ஆனிரைகள் உள்ளவிடத்துத் தம் அடி களை மறைத்துள்ள செருப்புகள் தேயச் சென்று அவரிடம் கவர்ந்து கொண்ட கன்றுகளையுடைய ஆநிரைகளைக் கொள்ளை யிட்டுக் கொணர்ந்து அவற்றைத் தமக்குள் பங்கிட்டுக் கொள்ளும் அகன்ற இடத்தையுடைய பெருங்காடு அதில், அகன்ற வானமாகிய கடலில் இயங்கும் தோணி போல் பகற்போதில் நின்ற பல கதிர்களையுடைய பகலவனின் வெப்பம் விளங்கிப் பரவச் சுழன்று வரும் மேல் காற்றால், புல்லிய அடிப் பகுதியை உடைய முருங்கை மரத்தில்