பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை த. கோவேந்தன் : 265

முதிர்ந்து கழியும் பல பூக்கள் கார் காலத்தில் ஆலங்கட்டி போல உதிரும் இவ் இயல்புடைய நடுக்கம் ஏற்படுத்தும் பல மலைகளையும் தாண்டிச் சென்ற நம் தலைவர்க்கு வெறுக்கத் தக்க செய்ல யாதும் நாம் செய்திலமே' என்று பிரிவிடை வேறுபட்ட தலைவி தோழிக்குச் சொன்னாள்

348. நலனையேனும் நல்காரோ?

நிழல் அறு நனந்தலை, எழால் ஏறு குறித்த கதிர்த்த சென்னி, நுணங்கு செந் நாவின் விதிர்த்த போலும் அம் நுண் பல் பொறி, காமர் சேவல் ஏமம் சேப்ப; முளி அளில் புலம்பப் போகி, முனாஅது முாம்பு அடைந்திருந்த மூரி மன்றத்து, அதர் பார்த்து அல்கும் ஆ கெழு சிறுகுடி, உறையுநர் போகிய ஓங்கு நிலை வியல் மனை, இறை நிழல் ஒரு சிறைப் புலம்பு அயா உயிர்க்கும் வெம் முனை அருஞ் சுரம் நீந்தி; தம்வயின் ஈண்டு வினை மருங்கின் மீண்டோர்மன் என, நள்ளென் யாமத்து உயவுத்துணை ஆக நம்மொடு பசலை நோன்று, தம்மொடு தானே சென்ற நலனும் நல்கார் கொல்லோ, நாம் நயந்திசினோரே?

- காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார் அக 103 “நம்மால் விரும்பப்பட்ட தலைவர் நிழல் இல்லாத அகன்ற பாலை நிலத்தில் வல்லூற்றினை எறிவதற்குக் குறி வைக்கப்பட்ட பெரிய தலையையும், நுணுகிய சிவந்த நாவை யும், அள்ளித் தெளித்தாற் போன்ற அழகிய நுட்பமான பல புள்ளிகளையும் கண்டாரால் விரும்பப்படும் தன்மையையும் உடைய அழகிய குறும்பூழ்ச் சேவல், பாதுகாப்பான இடத்திற் சென்று தங்க எண்ணித் தானிருந்த காய்ந்த சிறிய புதர் தனித்திடச் செல்லும் அங்ங்னம் போன அது முன் பக்கத்தில் வன்னிலத்தைச் சார்ந்திருந்த பழைய பெரிய அம்பலத்தில் ஆறலைக் கள்வர் வழிப்போக்கரை எதிர்பார்த்துத் தங்குவ தற்கு இடமான, பசுக்களையுடைய சிறிய ஊர் அந்த ஊரில்