பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 * அன்பொடு புணர்நத ஐந்திணை - பாலை

வாழ்ந்தவர் விட்டுப் போன இடமான உயர்த்த நிலையை உடைய பெரிய மனையில் இறப்பினது நிழலின் ஒரு பக்கத்தே தங்கித தனிமையாய்ப் பெருமூச்சு விடும் இத்தகைய கொடிய போர் முனை இருப்புகளையுடைய அழகிய சுரத்தைக் கடந்து தம்மிடத்து வந்த பொருள் ஈட்டும் வினையில் மீண்டும் செல்லலானார் என, நள்ளென்ற நடு யாமத்தும் உசாவும் துணையாகும் பொருட்டு நம்முடன் இதுவரை பசலையைப் பொறுத்திருந்து இப்போது அவருடனே போய்விட்ட நம் பெண்மை நலத்தையேனும் இனி நமக்கு அருள மாடடாரோ? அங்ங்னமாயின் நான் உயிர் வாழேன்” என்று தலைவன் பிரிவின் போது தலைவி தோழியிடம் கூறினாள்

349. பாலையில் மகள் செல்ல வல்லளோ

, { அகல் அறை மலர்ந்த அரும்பு முதிர் வேங்கை ஒள் இலைத் தொடலை தைஇ, மெல்லென நல் வரை நாடன் தற்பாராட்ட யாங்கு வல்லுநள்கொல் தானே - தேம் பெய்து, மணி செய் மண்டைத் தீம் பால் ஏந்தி, ஈனாத் தாயர் மடுப்பவும் உண்ணாள், நிழற் கயத்தன்ன நீள் நகர் வரைப்பின் எம்முடைச் செல்வமும் உள்ளாள், பொய்ம் மருண்டு, பந்து புடைப்பன்ன பாணிப் பல் அடிச் சில் பரிக் குதிரை, பல் வேல் எழினி கெடல் அருந் துப்பின் விடுதொழில் முடிமார் கனை எரி நடந்த கல் காய் கானத்து வினை வல் அம்பின் விழுத் தொடை மறவர் தேம் பிழி நறுங்கள் மகிழின், முனை கடந்து, வீங்கு மென் கரைய ஏற்றினம் தரூஉம் முன்க தலை திறந்த வேண்ம் பகை தலைமணந்த பல் அதர்ச் செலவே?

- தாயங்கண்ணனார் அக 105 “மணிகள் பதிக்கப் பெற்ற, பொற்கலத்தில் இனிய பாலுடன் தேன்கலந்து ஏந்திச் செவிலித் தாய் ஊட்டவும் உண்ணாதவள் என் மகள் அத்தகையவள் மர நிழலில்