பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 * அனபொடு புணாந்த ஐந்தினை - பாலை

கல்லா நீள் மொழிக் கத நாய் வடுகர் வல் ஆண் அரு முனை நீந்தி, அல்லாந்து, உகு மண் ஊறு அஞ்சும் ஒரு காற் பட்டத்து இன்னா ஏற்றத்து இழுக்கி, முடம் கூர்ந்து, ஒரு தனித்து ஒழிந்த உரனுடை நோன் பகடு அம் குழை இருப்பை அறை வாய் வான் புழல் புல் உளைச் சிறாஅர் வில்லின் நீக்கி மரை கடித்து ஊட்டும் வரையகச் சீறுர் மாலை இன் துணைஆகி, காலைப் பசு நனை நறு வீப் பரூஉப் பரல் உறைப்ப, மண மனை கமழும் கானம் துணை ஈர் ஒதி என் தோழியும் வருமே.

- காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார் அக 107 “பெருமானே, நீ என் தோழியை நின்னுடன் அழைத்துக் கொண்ட போக எண்ணினாய் இச் செய்தியை யான் குறிப்பாக அவள் உணர்ந்து கொள்ளும் பொருட்டுப் பல வகையாலும் சொல்லுந்தோறும் அவள் அதைக் கேட்கும் போதெல்லாம் தன் நெஞ்சுள் பல நினைவுகளை தினைந்து அந் நினைவுகளை ஆராய்ந்து பார்த்துப் பின் துன்பச் சுமையால் மெலிந்துள்ள என் துன்பத்தை நீக்கும் பொருட்டு நின்னுடன் வர இசைந்தாள்

பெரிய புலியானது கரிய கல்லாகிய அகன்ற மலை இடத்தே, கலைமானைக் கொன்று தன் வயிறு நிறையத் தின்று எஞ்சியவற்றை விட்டுவிட்டுப் போனது அக் கலை மானின் உலர்ந்த தசையைப் பார்த்து, வழியில் செல்பவர் பெரிதும் மகிழ்ந்தவராயினர் அதை அங்குத் தழைத்த மூங்கிலின் விளைந்த நெல்லரிசியுடன் ஒருங்கே கூட்டி ஆயர் சேரியில் உள்ள தயிரை இட்டுச் சமைத்த வெண்மை நிற நிணத்தை உருக்கிக் கூட்டிய வெண் சோற்றைப் புள்ளி பொருந்திய அரையையுடைய தேக்க மரத்தினது அகன்ற இலையில் வைத்து உண்பர் அங்ங்னம் உண்ணுதற்கு இட மாய், போர்த் தொழிலை அல்லாது பிறவற்றைக் கல்லாத நெடுமொழியையும், சினம் மிக்க நாயையும் உடைய வடுகர் அவரின் வலிய ஆண்மை விளங்குகின்ற கடப்பதற்கரிய போர்க்