பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

புன் தலை மடப் பிடி அகவுநர் பெருமகன் மா வீசு வண் மகிழ் அஃதை போற்றி, காப்புக் கைந்நிறுத்த பல்வேல் கோசர் இளங்கள் கமழும் நெய்தல்அம் செறுவின் வளம் கெழு நல் நாடு அன்ன என் தோள் மணந்து அழுங்கல் மூதூர் அலர் எடுத்து அரற்ற நலகாது துறநத காதலா, எனறும கல் பொரூஉ மெலியாப் பரட்டின் நோன் அடி அகல்சூல் அம் கரைப் பெய்த வல்சியர் இகந்தனர் ஆயினும், இடம் பார்த்துப் பகைவர் ஒம்பினர் உறையும் கூழ் கெழு குறும்பில் குவை இமில் விடைய வேற்று ஆ ஒய்யும் கனை இருஞ் சுருணைக் கனி காழ் நெடு வேல் விழவு அயர்ந்தன்ன கொழும் பல் திற்றி எழஅப் பாணன் நல் நாட்டு உம்பர் நெறி செல் வம்பலர்க் கொன்ற தெவ்வர் எறிபடை கழிஇய சேயரிச் சில் நீர் அறுதுறை அயிர் மணற் படுகரைப் போகி சேயர் என்றலின், சிறுமை உற்ற என் கையறு நெஞ்சத்து எவ்வம் நீங்க அழாஅம் உறைதலும் உரியம் - பராரை அலங்கல் அம் சினைக் குடம்பை புல்லெனப் புலம் பெயர் மருங்கில் புள் எழுந்தாங்கு, மெய் இவண் ஒழியப் போகி, அவர் செய்வினை மருங்கில் செலீஇயர், என் உயிரே!

- கல்லாடனார் அக 113 நண்பர் கேடு அடைந்த போதும் தாம் கொண்ட நட்புத் தன்மையில் குறையாதவராய் அந்த நண்பரிடம் சென்று அவரை வழிப்பட்டு அவர்க்கு நன்மையைச் செய்யும் தன்மை காரணமாக, புன்மையான தலையை உடைய இளைய பெண் யானைகளைத் தன்னைப் பாடி வருகின்ற பாணர் தலை வனுக்குப் போர்க் களத்தில் பரிசிலாக வழங்கும் வள்ளன்மை யால் இன்பம் கொள்பவன் அஃதை அவனுக்குத் துன்பம் வந்த காலத்தில் அதைப் போக்கிக் காத்துப் பின்பும் துன்பம்